சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை அறிவிக்கும் நாள் வெகுதூரம் இல்லை என்றும் இன்னும் ஒருசில நாட்களில் அவர் தனது அரசியல் எண்ட்ரி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் ரஜினிக்கு நெருக்கமான அரசியல் கட்சி தலைவர் ஒருவர், கட்சி அறிவிப்புக்கு இது சரியான தருணம் இல்லை என்றும், தமிழகமெங்கும் பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடந்து வரும் சூழ்நிலையில் கட்சி அறிவிப்பு மக்களிடையே வெறுப்பை உண்டாக்கும் என்றும் ஆலோசனை கூறியதாக தெரிகிறது
இதனை ஏற்றுக்கொண்ட ரஜினி, தனது கட்சியின் அறிவிப்பை இன்னும் ஒருசில மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளாராம். இதனால் ரஜினி ரசிகர்கள் அப்செட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது