‘தளபதி 62’ படத்தில் இணைந்த முன்னாள் தமிழ் ஹிரோ

Published:

livingston - 2026‘சொல்லாமலே’ உள்பட ஒருசில படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் குணசித்திர நடிகராகவும் நடித்தவர் லிவிங்ஸ்டன். இவர் தற்போது விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்திசுரேஷுக்கு அப்பாவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இவரது கேரக்டரில் ஒரு சஸ்பென்ஸ் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related articles

Recent articles

spot_img