கார்த்திக், கவுதம் கார்த்திக், வரலட்சுமி நடித்த மிஸ்டர் சந்திரமெளலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் விஷால் சிற்ப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:
ஒருவரின் குழந்தை பருவ ஆசையை நிறைவேற்றி வைப்பது என்பது பெரிய விஷயம். அந்த வகையில் சூர்யாவின் தங்கை பிருந்தா சிவக்குமாரின் ஆசையை தற்போது நிறைவேற்றி வைத்து மிஸ்டர்.சந்திரமௌலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மிஸ்டர்.சந்திரமௌலி என்றாலே அது கார்த்திக் சார் தான். நடிகர் சங்கப் போராட்டத்தின் போது என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று எனக்கு கார்த்திக் சார் உறுதுணையாக இருந்தார்.
சினிமா வேலைநிறுத்தத்தின் போது உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. இது எனக்கான பெருமை அல்ல. இந்திய சினிமாவே தமிழ் சினிமாவை திருப்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயத்தை சாதித்துள்ளோம். எனது நண்பர் திருவுக்காகவும், வருவுக்காகவும் தான் இங்கு வந்தேன் என்றார். ஏற்கனவே திருவுடன் மூன்று படங்களில் இணைந்துவிட்டேன். மற்றொரு படத்திலும் விரைவில் இணைய இருக்கிறோம் என்று கூறினார்.
விஷால், வரலட்சுமி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதும், நடிகர் சங்க கட்டிட பணி முடிந்தபின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



