sema botha agathey - 2026சமீபத்தில் வெளியான கவுதம் கார்த்திக் நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம் ஆபாசத்தின் உச்சக்கட்ட திரைப்படம் என திரையுலகினர் உள்பட பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுபோன்ற திரைப்படங்களை ஊக்குவித்தால் இளையதலைமுறையினர் சீரழிந்துவிடுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அதர்வா நடித்த ‘செம போத ஆகாதே’ படத்தின் 3 நிமிட காட்சியை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திற்கு இணையாக ஆபாச காட்சிகள் இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி டபுள்மீனிங் படங்களை ரசித்து கடந்துவிட வேண்டும் என்று இந்த படத்தின் இயக்குனர் பத்ரி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திலும் ஆபாசங்கள் அதிகம் இருந்தாலும் நிச்சயம் எதிர்ப்பும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending