வைகோ – ஆர்ஜே பாலாஜி சந்திப்பு: அடுத்த திட்டம் என்ன?

சினி நியூஸ் சினிமா

vaiko rj balaji - 2026சமீபத்தில் நடிகர் ஆர்ஜே பாலாஜி அரசியலில் ஈடுபட போவதாக சென்னையில் சுவர் விளம்பரங்கள் செய்யபப்ட்டன. அதேபோல் ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டரில் ஒரு கொடியையும் அறிமுகம் செய்தார். இதனை வைத்து அவர் புதிய கட்சி தொடங்கவுள்ளாரா? என்று நெட்டிசன்கள் கேலி செய்ய ஆரம்பித்தனர்.

ஆனால் இந்த அரசியல் ஸ்டண்ட் எல்லாம் அவருடைய அடுத்த படத்திற்காக என்றும், கன்னட ரீமேக் படம் ஒன்றில் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும், அந்த படத்தில் அவர் நடிக்கும் அரசியல்வாதி கேரக்டரை பிரபலப்படுத்தவே இந்த பில்டப் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திடீரென ஆர்ஜே பாலாஜி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சாதாரண சந்திப்பா? அல்லது மதிமுகவில் இணையும் திட்டமா? என்பது குறித்து ஆர்ஜே பாலாஜி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார். இதனால் அவருடைய அரசியல் நடவடிக்கை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.