மகளுடன் அமீர்கானின் சர்ச்சைக்குரிய புகைப்படம்

சினி நியூஸ் சினிமா

amirkhan ira - 2026பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானும் அவருடைய மகளும் சர்ச்சைக்குரிய வகையில் போஸ் கொடுத்த ஒரு புகைப்படம் இணையதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமீர்கான் மீது கவர்ச்சியான உடையணிந்து அவருடைய மகள் இரா உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் வைராலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு தந்தையும் மகளும் கொடுக்கும் போஸா இது? என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்/

ஆனால் இந்த போஸ் ‘டங்கல்’ படத்தில் உள்ளது போன்ற போஸ் என்றும், ஒரு தந்தைக்கு மகள் என்பவர் எத்தனை வயதானாலும் அவர் மகள் தான் என்றும், இதில் தவறாக நினைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும் அமீர்தான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள புனிதமான உறவை ஒரே ஒரு புகைப்படத்தை வைத்து கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் இந்த புகைப்படம் பாசிட்டிவ் எண்ணத்துடன் பார்ப்பவர்களுக்கு எந்த தவறும் தெரியாது என்றும் அமீர்கான் ரசிகர்கள் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.