அனைவரும் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் ஏற்பட்ட ஊடரங்கினால் மக்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நேரத்தில் சினிமா பிரபலங்கள் தங்களது ரசிகர்களிடம் இணையதளத்தில் தொடர்ச்சியாக பேசிவருகின்றனர். அவ்வாறு பிந்து மாதவியும் நேற்று பேசினார்.
சென்னை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய பிந்து மாதவி தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகைகளுள் ஒருவராக கருதப்படுகிறார்.

இவர் தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஒரு திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

அப்போது அவரிடம் ஒரு ரசிகர் ” நீங்க சிங்கிளா.?” என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் “நான் ரகசியமாக ஒரு உறவிலுள்ளேன் ஆனால் அது காதலா என்றுக் கேட்டால் இல்லை. காதலின் அடிப்படையில் நா இன்னும் சிங்கிள் தாங்க.!” என்று கூறியுள்ளார்.

அவர் என்ன சொல்லியிருக்கிறாரென்று ரசிகர்கள் புரியாமல் தவித்து ,ஏதோ எப்படியிருந்தாலும் நல்லா இருந்தா சரி தான் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்



