விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா….

Published:

samyuktha

பிரபல மாடல் மற்றும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடவடிக்கையால் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளானவர் சம்யுக்தா. போன வாரம் அவர் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்த செய்தியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

samyuktha

அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தை பிரசாத் தீனதயாளன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு 96 பட இயக்குனர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தில் ராஷிகண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img