ஜூன் 21ல் வெளியாகிறது விஜய் சேதுபதி – அஞ்சலி நடிப்பில் ‘சிந்துபாத்’!

sindhubath - 2026

‘கே ப்ரொடக்ஷன்ஸ்’ ராஜராஜன் மற்றும் ‘வான்சன் மூவீஸ்’ ஷான் சுதர்ஷன் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்சன் திரில்லர் ‘சிந்துபாத்’ ஜூன் 21ல் வெளியிடப் படுகிறது.

‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியும், இயக்குனர் எஸ்.யூ.அருண் குமாரும், இணைந்து பணியாற்றும் மூன்றாவது அதிரடி திரைப்படம் ‘சிந்துபாத்’

முதன் முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தனது தந்தையுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, அது ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தையும் மகனுமாக நடிக்கவில்லை என்றாலும், இருவரின் கதாபாத்திரமும் அவர்களிடையே நிலவும் ஒரு உன்னதமான தனித்துவ உறவுநிலையை பிரதிபலிக்கிறது.

விஜய் சேதுபதி இப்படத்தில் சற்றே காதுகேளாத சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுபவராக, ஒரு முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஒரு பெண்ணை மையப்படுத்தியே இப்படத்தின் கதை சுழலுதால், அஞ்சலியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.

லிங்கா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தின் தேவையறிந்து தனது எடையை 20 கிலோ அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், ‘தாய்’ மொழியையும் கற்றுக்கொண்டு, வசனம் பேசி அசத்தியிருக்கிறார்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

anjali sindhubath - 2026இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, மற்றும் தென்காசியில் படமாக்கப்பட்டு, 52 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. ‘தாய்’ மொழியில் டப்பிங் இருந்ததால், தாய்லாந்திலேயே அந்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் நிறைந்த படமென்பதால், ஹாலிவுட் சண்டைகாட்சியமைப்பு வல்லுனர் ‘பிரதித் சீலம்’ என்ற ‘நுங்’ இப்படத்தில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் சுமார் ஒன்பதரை நிமிடங்கள் ‘சிங்கிள் ஷாட் சீக்வன்ஸ்’ மூலம் படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி அமைப்புக்கென பிரத்யேகமாக 100 க்கும் மேற்பட்ட தாய்லாந்து இளநிலை கலைஞர்களும், இந்திய கலைஞர்களும் ஒன்றிணைந்து, பல ஒத்திகைகளுக்கு பின்னர் காட்சிப் படுத்தியிருப்பது ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் டீசர் வெளியானது முதல், எடிட்டிர் ரூபனின் புதிய அணுகுமுறை மக்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜாவின் மனதிற்கினிய பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கிறது.sindhubath1 - 2026

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் வித்தியாசமான கோணங்களில் சண்டை காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

எதிர்வரும் ஜூன் 21ம் தேதி, ‘கே ப்ரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘வான்சன் மூவீஸ்’ தயாரிப்பில், இயக்குனர் எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ‘சிந்துபாத்’ உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories