
திருவாரூர் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வரும் மே 29/5/17 அன்று திருவாரூரின் சிறப்புமிக்க ஆழித்தேர் நடக்க இருந்த நிலையில் தற்போது தேதியை கோவிலின் நிர்வாகம் மாற்றியுள்ளது என்று கூறப்படுகிறது.
ஏன் இந்த மாற்றம் என்று ஆராய்ந்து பார்த்தால் சற்று அதிர்ச்சியாக உள்ளது,
நான்கு வீதிகளில் உள்ள சில பெரிய நிறுவனங்கள் தங்கள் கட்டடத்திற்கு எந்த பாதிப்பும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, ஆழித்தேரின் அளவை குறைக்க தேர் கட்டும் கட்டுமான பணியாளர்களிடம் லஞ்சம் தந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
எனவே இதை சரி செய்யும் நோக்கிலே கோவிலின் நிர்வாகம் தேரின் தேதியை 04/06/17 என்று தேதியை மாற்றியுள்ளதாக தெரிய வருகிறது.
உலகின் பிரசித்தி பெற்ற திருவாரூரின் ஆழித்தேரைக் காணவரும் மக்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் இந்த செயல் அமைந்துள்ளது.
இது உண்மையாக இருக்குமானால், தங்கள் சுய நலத்திற்குகாக ஒட்டுமொத்த மக்களின் உணர்களை சிதைக்கும் வகையில் உள்ளது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கதக்க செயல் என்பதைத் தெரிவிக்கிறோம்.. என்று திருவாரூரில் பரவலாகப் பேசப்படுகிறது.
–



