விஜய் சேதுபதிக்கு இளைஞர் சொல்லிய கதை: சேதுபதின்னா என்ன தெரியுமா?

Published:

விஜய் சேதுபதி சார் ஒரு கதை சொல்டா சார்…

அரசர்கள் மரபு படி ஓர்
அரசன் போரில் வென்றால் தோற்றவன் அல்லது இறந்த அரசனின் மனைவியை தன் வசம் ஆக்கி கொள்ள முடியும். ஏன் என்றால் தோற்ற அரசனின் சொத்துக்கள், நாடு, அரண்மனை அனைத்தும் உரிமை உடையது அந்த அடிப்படையில் தோற்றுப்போன அரசனின் மனைவியை தன் வசம் ஆக்கி கொள்ள முடியும்.

ராம – ராவண யுத்தம் முடிவடைந்த பிறகு இரவு ராமன் போர் களத்தில் அமர்ந்து இருந்தான். அப்போது ஓர் நிழலின் தலை தன் திருவடி அருகில் வருவதை கண்டு தன் பாதத்தை உள்ளே இழுத்தான். யார் நீங்கள் என்று கேட்க. அந்த நிழல் உருவம் பேசியது. நான் ராவணனின் மனைவி மன்டோதரி என் கணவர் போன்ற ஒரு வீரன் இந்த உலகத்தில் இல்லை என்று செருக்குடன் இருந்தேன் அவரின் வீரம் எனக்கு நன்றாக தெரியும் ஆனால் என் கணவரை வீழ்த்தும் அளவுக்கு உங்களுக்கு வீரத்தை வீரத்தை விட ஏதோ ஒரு விசயத்தில் உயர்ந்தவர் என்று புரிந்து கொண்டேன்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

தோற்று போன அரசனின் மனைவியை அடக்கி தன் இச்சையை தீர்த்து கொள்ளும் அரசர்கள் போல் இல்லாமல் என் நிழல் கூட உங்கள் பாதத்தில் பட அனுமதிக்கவில்லை. தன் கணவன் வலுக்கட்டாயமாக சீதையை கடத்தி வந்தும் அவரை வீழ்த்திய பிறகும் என்னை ஏதும் செய்யாமல் இருப்பது நிச்சயமாக சாதாரண மனிதனில் இருந்து மாறுபட்டு இருக்கும் நீங்கள் யார் என்று கேட்ட பிறகு தன் அவதார ரகஷ்யத்த காட்டினான்.

ராவணனை வீழ்த்திய பிறகு தான் உரிமை கொண்டாடாமல் அவன் தம்பிக்கு அரச பதவியை தந்தான்.

ராவணன் இறந்த பிறகு சாதாரண அரசன் போல் அல்லாமல் தன் மனைவியை கடத்தி வந்தவன் மனைவியை எந்த துண்பமும் செய்யாமல் இருந்தானே…

அப்போ ராவணனை விட ராமன் உயர்ந்தவன் தானே சார்.

விஜய் சேதுபதி சார்

ஒரு கதை சொல்லடா சார்

ஏக பத்தினி விரதனா ராமன் தன் மனைவியை காப்பாற்ற இலங்கைக்கு போக கட்டிய பாலத்தின் பெயர் சேது பந்தம், ராம் சேது என்று பெயர். அந்த இடத்துக்கு பெயர் சேதுக்கரை.

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

ராமன் கெட்டவனா ராவணன் கெட்டவனா பாக்குறது முன்னாடி. உங்கள் பெயரிலேயே ராமன் இருக்கான் சார்.

சேதுபதி இந்த பெயருக்கு அர்த்தம் என்ன தெரியுமா சார்

சேது – ராமன் கட்டிய பாலம்
பதி – நாயகன் அதாவது தலைவன்.

சேது + பதி = சேதுவிற்கு தலைவன் அல்லது உரிமை உடையவன் அல்லது சேது என்னும் பாலத்தினை உருவாக்கியவன் ராமன்.

இப்படி ராமன் பெயரை வைத்து ராமனை அவதூறு பேச்சிரிங்களே சார்.

இப்போ ராமாயணம் கற்பனை கதைன்னுசொன்னா அப்போ ராஜஸ்தானில் பிறந்து இப்போ உங்களுக்கு முப்பாட்டனா இருக்கும் ராவணனும் கற்பனை தானே சார்

இப்படி பிழைக்கிறதுக்கு பேரு என்ன தெரியுமா சார்

எச்ச…

By Sudharshan

Related articles

Recent articles

spot_img