பிரான்ஸ் நாட்டிலிருந்து கார்த்திகை தீபத்தை தரிசிக்க, தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை வந்துள்ளார் சிவபக்தர்.
நம்ம கலாச்சாரத்துக்கோ, ஆன்மீகத்துக்கோ சம்மந்தமே இல்லாத ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தாண்டி உள்ள ஒரு வேற்று நாட்டுகாரங்க, எதை எந்த முறையில செய்யணும்னு தெரிஞ்சு எவ்ளோ அழகா நெத்தில திலகமிட்டு, மங்களகரமா புடவை, மஞ்சள் துண்டில் உடலை போர்த்தி, வேஷ்டி அணிந்து, வெறும் காலுடன் தெய்வத்தை தரிசிக்க வந்திருக்காங்க.
உலகத்துக்கான அத்தனை ஆன்மீக பொக்கிஷங்களையும் உள்ளடக்கிய தமிழகத்துல, ஆன்மீகத்தோட அருமை தெரியாம, நாத்திகம் பேசி வீணாக போகிறவர்கள் அநேகம்.
இது பெரியார் மண்ணுடா… என்று வேறு தலை சொறிவார்கள் சிலர். ஆனால் இதுதான் தமிழ் மண் இதுதான் தமிழ் கலாச்சார அடையாளம் என காட்டி விட்டார் இந்த அன்பர்.



