ஹலோ மோடி ஐயாங்கலாங்க….
எங்க ஊரு திருநெல்வேலிங்க
எங்க ஊர்ல வடக்கால கோக் கம்பெனி இருக்குங்க. அத மூடனுங்க…
தெக்கால கூடங்குளம் இருக்குங்க. அதையும் மூடனுங்க..
கிழக்கால எங்க பங்காளி ஊரு தூத்துக்குடில ஸ்டெர்லைட், ஸ்பிக் அப்புறம் அனல்மின் நிலையம் இருக்குங்க. அதையும் மூடனுங்க..
மேக்கால தென்காசி வரைக்கும் சுத்தி சுத்தி காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் இருக்குங்க. அதுல ஒரு காத்தாடி விடாம எல்லாத்தையும் மூடனுங்க…
அப்புறம் பக்கத்து ஊரு குமரி ல ஏதோ துறைமுகம் வருதாம்ங்க. அது வந்தா ஆமை குஞ்சு பொறிக்காதாம்ங்க. அதனால அது வேண்டாங்க. விமான நிலையமும் வேண்டாங்க. அதோட சேர்த்து தூத்துக்குடி துறைமுகத்தையும் மூடிட்டா ரொம்ப சந்தோசம்ங்க…
எல்லாத்தையும் மூடிட்டு என்ன விவசாயம் பார்க்க போறியானா கேட்குறீங்களாங்க?
அட நீங்க வேற எல்லா நிலத்தையும் பிளாட் போட்டு ரெடியா வச்சுருக்கோமுங்க
எங்க சின்ன ஐயா ஸ்டாலின் முதல்வர் ஆகி நில ரிஜிஸ்டரேஷன் சார்ஜ குறைச்ச உடனே விற்க வேண்டியது தாங்க பாக்கி..
என்னது தாமிரபரணியாங்க? மணல புரா சாதிக்கார பிரசிடண்ட், எம்எல்ஏ வச்சு அள்ளிடோம்ங்க. ஊரு சாக்கடைய கலந்துட்டோம்ங்க. எங்க தலைமுறைக்குள்ள தாமிரபரணி சோலிய முடிச்சிடுவோங்க..
அப்ப எப்படி பிழைப்போமாங்க…?
அதான் எங்க அண்ணன் சீமான் முதல்வராகி பிஇ, எம்இ, எம்பிஏ, எம்சிஏ படிச்ச பயலுகள்ள இருந்து படிக்காதவன் வரைக்கும் மாடு மேய்க்குற வேலையை அரசு வேலை ஆக்கிடுவார்லங்க..
மேய்க்க மாடுங்க, குடிக்க குவாட்டர்ங்க, திங்க மோடி ஒழிக பிரியாணிங்க.. வேற என்னங்க வேணுங்க…
சட்டு புட்டுனு முடிச்சு உடுங்க.. கிளம்பட்டுமாங்க…
– சமூக வலைத்தள உலா