இந்திய கிரிக்கெட் வீரரான தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் டிரான்ஸ்பரண்ட் ஆடைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் அண்மையில் தனது தோழி பூர்ணா படேலின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மணிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த லெஹங்காவை அணிந்திருந்தார். அவரது மேலாடையில் தோல் நிறத்திலேயே உள்துணி இருந்ததால் சாக்ஷியை நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கினர்.
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் நீங்கள் இப்படி அரைகுறை ஆடை அணியலாமா?, என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர், ‘’பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய நீங்கள், அரைகுறை ஆடை அணிவது மிகவும் அருவெறுப்பாக உள்ளது,’’எனக் கூறியுள்ளனர்.
இந்த புகைப்படத்தில் சாக்ஷி அழகாகத்தான்உள்ளார். அவரை பற்றி வதந்தி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,’’ என்றும், சிறு கிறுக்கர்கள் பேசுவதை பற்றி நீங்கள்கவலைப்படாதீர்கள் மேடம்‘’ என்றும் சில ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உங்களுக்கு சற்றும் ஆடை அலங்கார சிந்தனை இல்லை.. ஒரு பிரபலத்தின் மனைவி நீங்கள் இப்படி உடை அணியலாமா? தோனி.. நீங்கள் எப்படி உங்கள் மனைவி இத்தகைய ஆடைகளை அணிய அனுமதிக்கிறீர்கள்?
இதே தொனியில் கருத்துகள் குவிந்து வருகின்றன.





