ஆழ்வார்குறிச்சி பள்ளியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு!

kizhambur alwarkurichi - 2026

கலைமகள் திங்கள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், தாம் பயின்ற ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் ஜன.28, செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப் பட்டிருந்த திருக்குறள் விளக்க நிகழ்ச்சியில் 7 வகுப்புகளில் உள்ள மாணவ மாணவியரிடையே பேசினார்.

ஈரடியால் உலகை அளந்த திருக்குறளில், ஏழு சீர்களில் வெண்பா வகையில் கருத்துகள் பதியப் பட்டிருக்கும். அதை முன்னிட்டு, ஏழு என்ற எண்ணைக் கையில் எடுத்துக் கொண்ட கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், தொடர்ந்து ஏழு மணி நேரம் திருக்குறள் குறித்து விளக்க நிகழ்ச்சிகள் செய்யத் தொடங்கினார்.

முதலில் சென்னையில் தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முன்னிலையில் 7 மணி நேரம் தொடர்ந்து திருக்குறள் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் திருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்களுக்கான 7 மணி நேரம் தொடர்ந்து திருக்குறள் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார்.

தற்போது தாம் படித்த பள்ளியில் பள்ளி மாணவர்களுக்காக 7 வகுப்புகள் தொடர்ந்து திருக்குறள் விளக்கக் கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லும் வகையில் இந்த நிகழ்ச்சியினை நடத்தினார். அந்த வகையில் இது தமது மூன்றாவது நிகழ்ச்சி என்று குறிப்பிட்டார் கீழாம்பூர்.

kizhambur alwarkurichi school - 2026

முன்னதாக, பள்ளிக்கு வந்திருந்த கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியனுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடசுப்பிரமணியன் வரவேற்று, நினைவுப் பரிசளித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
paramakalyanischool - 2026

தொடர்ந்து, 9,10,11 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களிடையே ஏழு வகுப்புகளில் திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரம் தொடங்கி பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு திருவள்ளுவரின் உள்ளத்தை எடுத்துரைத்தார். திருக்குறள் கருத்துகள் எவ்வாறு நம் வாழ்வில் மேற்கொள்ளத் தக்கவை என்பது குறித்து கூறியது தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று மாணவர்கள் பதிலுரைத்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழாசிரியர் ஜெயந்தி ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பள்ளியின் சிறப்பு அதிகாரி சுந்தரம் நிறைவு நிகழ்ச்சியில் வாழ்த்துரை நல்கினார். இந்த நிகழ்ச்சியில், கலைமகள் இதழ் பதிப்பாளர் பிடி ராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories