தெலுங்கானா தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கிறிஸ்துவர்களுக்கு அறிவித்துள்ள சலுகைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் – ஆனால், 2016 சட்டசபைத் தேர்தலின் பொழுது திமுக அறிவித்த தேர்தல் அறிக்கை பற்றித் தெரியுமா? –
திமுக தேர்தல் அறிக்கை 2016
பக்கம் 112: பத்தி 419: கோயில்களுக்கு சொந்தமான மனைகளில் நீண்டகாலமாக குடியிருப்போருக்கு, அந்த நிலங்களை வழங்க ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் உயர்நிலை குழு –
பக்கம் 85, பத்தி 295 : வக்ப் வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும் -source: https://www.dmk.in/dmk2016Manifesto_Tamil.pdf
எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் பாருங்கள் – ஆனால், அந்தத் தேர்தலில் கூட முஸ்லிம்கள் மட்டும் வாக்களித்து தி.மு.க கூட்டணி 99 தொகுதிகளைப் பெற்று விடவில்லை – இந்து மதத்திலேயே இருந்து கொண்டு அறிவை அடமானம் வைத்து விட்ட மூடர்கள் வாக்களித்துத் தான் இத்தனை தொகுதிகள் கிடைத்தது –
இந்தத் திருடர்கள் பகிரங்கமாக அறிவித்துவிட்டே தேர்தலைச் சந்தித்து வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பது வெட்கக்கேடானது !
நாம் எதையெல்லாம் இந்த திருட்டுத் திராவிடக் கூட்டத்திடம் இழந்துள்ளோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
முதலாவதாக நமது கோவில்களுக்குச் சொந்தமான 4,78,347.96 ஏக்கர் நிலம் ஆக்ரமிப்பில் உள்ளது – இதில் கோவை மாவட்டம், சூலூர் வட்டம், கண்ணம்பாளையம் கிராமத்தில் – ” கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி” – முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அவர்களால் நிறுவப்பட்டு நடப்பதை அறிவீர்களா?
கருணாநிதி பெயரில் அமைந்த அந்தக் கல்லூரியின் அமைவிடம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்க்கும், முன்னொரு காலத்தில் கருணாநிதி பீரங்கி வைத்து பிளக்க ஆசைப்பட்ட – தில்லை நடராசருக்கும் சொந்தம் என்பதை அறிவீர்களா?-‘
கருணாநிதி பெயரை தாங்கி நிற்கும் கல்லூரி அமைவிடம், – “இந்தச்சொத்தை எவ்வித வில்லங்க பராதீனத்திற்கும் உட்படுத்தாமல் என்ற ” நிபந்தனையுடன் அந்த நிலங்களின் விவசாய வருமானத்திலிருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்க்கும், –
தில்லை நடராசருக்கும் தீப ஆராதனை செய்யவும் அந்தச் சிவாலயங்களுக்கு பசியுடன் வரும் சேவார்த்திகளுக்கு அன்னதான சமராதனை செய்யவும் மட்டும் ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தம் என்பதை அறிவீர்களா?-
இந்த நிலங்களை, திரிபுரமதை எரி செய்த சிவன் சொத்துக்களை திட்டமிட்டு பதிவு செய்யப்படாத போலி உயில் மூலம் ஆவணங்களை உருவாக்கி, – சட்டத்தின் கண்களை கட்டி , அறிவியல் ரீதியாக, விஞ்ஞான பூர்வமாக அபகரித்தது மட்டுமல்லாமல் –
தமிழகத்தின் மூத்த நாத்திகரான கருணா பெயரை வேறு வைத்துள்ளனர் –
இது ஒரு சாம்ப்பிள் தான் – இதே போல் கழக ஆட்சியில் மட்டுமல்ல –
வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் ஆட்சியில் பல ஏக்கர் கோவில் நிலங்கள் 99 வருட குத்தகை என்ற அடிப்படையில் பல சர்ச்சுகளும், மிஷனரிகளும், கிறிஸ்தவக் கல்லூரிகளும் குத்தகை முடிந்தும் கூட இன்று வரை செயல்பட்டு வருது உங்களுக்குத் தெரியுமா? –
கோவில்களில் 7000 சிலைகளைக் காணோம் என்று அறிவித்துவிட்டு பொன். மாணிக்கவேல் அவர்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வரும் வேளையில் கூட … உத்திரகோஷமங்கை மரகத நடராஜரைத் திருட முயற்சி நடக்கிறது –
அதே நாளில் மணப்பாறையில் ஏழு சிலைகள் திருடு போகிறது – அதற்கும் முந்திய வாரம் குருவித்துறை குரு ஸ்தலத்தில் சிலைகள் திருடு போகின்றன என்றால் –
இதற்கு முன் எத்தனை சிலைகள் நகைகள், பொக்கிஷங்கள் களவு போயிருக்கும்?- ஆனால், இவற்றுக்கெல்லாம் காரணமான கயவன்களுக்கு நாம் வாக்களித்து வருகிறோம் !
இந்துக் கோவில்களை எல்லாம் எடுத்துக் கொண்டு _ அந்த வருமாணத்தில் சர்ச்சுகளுக்கும், மசூதிகளுக்கும் நிதி தருகிறது அரசாங்கம் – ஹாஜிக்களுக்கு மாதம் 20,000 சம்பளம். ஆனால், கோவில் பூசாரிகளுக்கு 4,000 சம்பளம் !
ஹஜ், ஜெருசலேம் செல்ல மானியம் – தைப்பூசத்தன்று நாம் பழனி சென்றால் இரண்டு மடங்கு பேருந்துக் கட்டணம் – என்ன நியாயம் இது?
இன்று பல ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்கள் பராமரிப்பு இல்லாமல் பாழ்பட்டுக் கொண்டிருக்கின்றன – ஆனால், தெருவுக்குத் தெரு சர்ச்சுகளும், மசூதிகளும் நாள்தோறும் பெருகி வருகின்றன- அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் இங்கே 90% இந்துக்கள் – 100% இஸ்லாமியனும், 100% கிறிஸ்தவன்களும் துளி கூட விட்டுக் கொடுக்காமல் தனக்குச் சாதகமானவனைத் தேர்ந்தெடுக்கிறான் –
ஆனால், 90 % இந்துக்கள் நடப்பது என்னவென்றே புரியாமல் தனக்கு எதிராகச் செயல்படுபவனைத் தேர்ந்தெடுக்கிறான்… வெட்கமான விஷயம் இது.-
இந்துக்கள் இனிமேலாவது புரிந்து கொண்டு இருப்பதையாவது காப்பாற்ற முன்வர வேண்டும் – இல்லை தலைக்கு மேல் போகட்டும் என்றிருந்தால் – மொத்தமாக அழிந்துவிடும் – இந்துக்களின் எழுச்சியே; தேசத்தின் எழுச்சி!
கருத்து: ந.முத்துராமலிங்கம்