சில நொடிகளில்.. இலை வடாம்!

ilai vadam
ilai vadam

இலை வடாம்

தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 200 கிராம்,
பச்சரிசி – 2 டேபிள்ஸ்பூன்,
ஓமம் – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
சதுரமாக நறுக்கிய வாழையிலைத் துண்டுகள் – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வடாம் செய்வதற்கு முதல் நாளே இட்லி அரிசியையும் பச்சரிசியையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து மாவை வெளியில் வைத்துவிடவும். ஓமம், ஒரு டீஸ்பூன் எண்ணெய், பெருங்காயத்தூளை மாவில் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு வாழையிலையின் பின்புறம் மாவை ஒரு கரண்டியால் ஊற்றிப் பரவலாகத் தேய்த்துக்கொள்ளவும். வாணலியில் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தவுடன் அதன்மேல் ஸ்டீமர் தட்டை (ரைஸ் குக்கரில் இருக்கும் ஸ்டீமர் தட்டு) வைத்து அதன் மேல் மாவு எழுதிய இலையை வைத்து மூடி ஆவியில் வேகவைக்கவும். அடுத்த இலையைத் தயாரிப்பதற்குள் முதலில் வைத்த இலை மாவு வெந்துவிடும். சிறிது ஆறியதும் எளிதாக இலையிலிருந்து உரித்து எடுத்துவிடலாம். இதே முறையில் இலையை மாற்றி மாற்றி எழுதி வேகவைத்து எடுக்கலாம். ஒரு பாதி மாவை இதுபோல காரமில்லாத இலை வடாமாகத் தயாரித்துவிட்டு, மீதமிருக்கும் மாவில் மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து இதே முறையில் இலை வடாம் தயாரிக்கலாம்.

குறிப்பு: இந்த இலை வடாமுடன் இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துச் சாப்பிடலாம். வெயிலில் காயவைத்து எண்ணெயில் பொரித்தோ அல்லது தீயில் வாட்டியோ சாப்பிடலாம். பத்தியச் சாப்பாட்டில் இந்த இலை வடாம் கட்டாயம் இடம்பெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories