
புரோட்டீன் புலாவ்
தேவையானவை:
வெள்ளைக் கொண்டைக்கடலை, வெள்ளைப் பட்டாணி, பச்சைப் பட்டாணி, வேர்க்கடலை – தலா அரை கப்,
அரிசி – ஒன்றரை கப்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி – ஒரு துண்டு,
புதினா, மல்லித்தழை – கால் கப்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும். பருப்புகளை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் குக்கரில் வேக விடவும். பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தை வறுத்து, அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேகவைத்த பருப்புகளை போட்டு 2 நிமிடம் வதக்கவும். இதனுடன், ஊறவைத்த அரிசியை வடித்து உப்பு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக விடவும். 2 விசில் வந்ததும் இறக்கி, ஆறியதும் மல்லித்தழை, புதினா தூவி பரிமாறவும்