Millet masala roti - 2026

ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: சிறுதானிய ரொட்டி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Millet masala roti - 2026

சிறுதானிய ரொட்டி
தேவையான பொருட்கள்

1/4 கப் நாட்டு கம்பு மாவு
1/4 கப் ராகி மாவு
2 ஸ்பூன் வரகு மாவு
2 ஸ்பூன் சாமை மாவு
2 ஸ்பூன் தினை மாவு 2ஸ்பூன் கோதுமை மாவு
2 ஸ்பூன் தேங்காய் கொப்பரை துருவல்
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2 ஸ்பூன் கருப்பு எள்ளு
சிறிது சீரகம்
1/4 ஸ்பூன் மிளகாய் தூள்
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
சிறிது பெருங்காயம் இந்து உப்பு
செக்கு கடலை எண்ணெய்

செய்முறை

அனைத்து பொருட்களையும் ஒன்றாக
சேர்த்து வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது சிறிதாக மாவில் ஊற்றி நன்கு பிசைந்து மெது மெதுப்பான
உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
பின்பு அந்த உருண்டையை தரையில் வைத்து 8 – 10 நிமிடங்கள் வரை நன்கு மெது மெதுப்பாகும் வரை பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை அப்படியே ஈரமான துணியில் சுற்றி அல்லது ஒரு பாத்திரத்தில் மூடியை உட்புறமாக நீரால் துடைத்து, மூடிவைக்கவும்.

குறைந்தது ஒருமணி நேரம் கழித்து, மாவை எடுத்து மீண்டும் அடித்துப் பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

மாவு தோய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு (மிக மெல்லிதாக இடவரும்.)

நிதானமான சூட்டில் தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் சில துளிகள் எண்ணெய் விடவும்.

திருப்பிப் போட்டு விரும்பினால் இன்னும் சில துளிகள் எண்ணெய் விட்டு தோசைத் திருப்பியால் சுற்றி அழுத்திக் கொடுத்து திருப்பவும்.

இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும், கல்லிலிருந்து எடுத்துப் பரிமாறலாம்.
சுடான சிறுதானிய ரொட்டி தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.