நெல்லிக்காய் கொஜ்ஜூ
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் – 5 ,வெந்தயம் -1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் = 15 , புளி- சிறிதளவு , மஞ்சள் தூள் – 2 சிட்டிகை , பெருங்காயம் – சிறிதளவு , கடுகு – தாளிக்க , உப்பு , நல்லெண்ணெய்- தேவையான அளவு ,
செய்முறை :
வெறும் வாணெலியில் வெந்தயம் வறுத்து , பின்பு எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுத்து வைக்கவும்.நெல்லியைக் கொட்டை நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும். நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நெல்லியை வதக்கி, பின் தண்ணீர் சேர்த்து வேக வைத்து புளிக்கரைசல், மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து கொதித்ததும்,வறுத்த வெந்தயம், மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை அரைத்து கலக்கவும்.



