காங்., தலைவர் கபில் சிபலின் திரங்கா டிவி மூடல்! 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்ணீர்!

இந்நிலையில், திரங்கா ஊழியர்களுக்கு ஆதரவாக தான் கருத்துப் பதிவிடுவதால், தன் மீது அவதூறு வழக்கு பாயும் என்று தான் மிரட்டப் படுவதாக பர்கா தத் புலம்பியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் ‘திரங்கா டிவி’ அதன் ஊழியர்களை ஏமாற்றி விட்டது. தமிழக ஊடகங்கள் பொங்கியெழுமா?

காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தலைமையில் இயங்கி வரும் திரங்கா டிவி, மூடப் படுவதாகக் கூறப்படுகிறது. இதில் பணியில் ஈடுபட்டுள்ள 200க்கும் அதிகமான பணியாளர்கள் வேலையிழப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

ஊடகவியலாளர் பர்காதத் தனது டிவிட்டர் பதிவில் இதனை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, இதற்காக தாம் வருந்துவதாகவும், பணியாளர்களின் நிலை என்ன என்று கேள்வி கேட்டு பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு முன்னரும் இது போன்ற பிரச்னையை எழுப்பி, அந்த ஊடகத்தில் பணிபுரிந்த பணியாளர்கள், கடந்த 3ம் தேதி தில்லியில் பிரஸ் க்ளப் முன் அமைதிப் போராட்டமும் நடத்தினர்.

இவ்வாறு வெளியேற்றப் படும் பணியாளர்களுக்கு போதுமான அல்லது ஓரளவு கௌரவமான தொகையை இழப்பீடாகக் கொடுக்காமல் கபில் சிபல் ஏமாற்றி வருவதாக பிரச்னை எழுப்பப் பட்டது.

இதையே தனது டிவிட்டர் பதிவிலும் பர்காதத் குறிப்பிட்டுள்ளார். குறைந்தது 6 மாதம் அல்லது 3 மாத சம்பளத்தையாவது கொடுக்க வேண்டும். ஆனால், கபில் சிபல் ஏமாற்றுகிறார்.

கபில் சிபலின் மனைவி தான் நடத்தி வரும் இறைச்சித் தொழிற்சாலையில் வேலையாட்கள் முன்னிலையில் சத்தம்போட்டுக் கூறுகிறார்… நான் வேலையாட்களுக்கு ஒரு பைசாகூட கொடுக்காமல் தொழிற்சாலையை மூடி விடுவேன்! யார் இந்த பத்திரிகையாளர்கள்… 6 மாசம் சம்பளம் கேட்பது?! என்று கூறியிருக்கிறார் என தனது டிவிட்டர் பதிவில் பர்கா தத் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனாலும் பர்காதத் தனது வழக்கமான குயுக்தி புத்தியை வெளிப்படுத்தி, மத்திய அரசையும் இழுத்துள்ளார். அதனால்தான் கபில் சிபல் இவ்வாறு ஊடகத்தை மூடும் நிலைக்கு தள்ளப் பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், திரங்கா டிவியின் மூத்த ஆசிரியர் சுஷில் கோடியன், இதில் அரசின் பங்கு துளியும் இல்லை என்றார்.

இந்நிலையில், திரங்கா ஊழியர்களுக்கு ஆதரவாக தான் கருத்துப் பதிவிடுவதால், தன் மீது அவதூறு வழக்கு பாயும் என்று தான் மிரட்டப் படுவதாக பர்கா தத் புலம்பியிருக்கிறார்.

“பணியாட்களுக்கு சம்பளம் கொடுக்காமல் அவர்களை பணி நீக்கம் செய்ததோடு தன் மனைவியுடன் லண்டன் சுற்றுப்பயணம் சென்ற கபில் சிபல் இன்னொரு மல்லய்யா” – பர்க்கா தத்.

லுட்யன்ஸ் லடாய்…. காங்கிரஸ் வக்கீல் குண்டர் கபில் சிபலும் பர்க்காவும் இணைந்து மோடியை கவிழ்க்க ஆரம்பித்த திரங்கா (HTN Tiranga TV @NewsHtn) டிவியில் பணிபுரிந்த 200க்கும் மேற்பட்டோருக்கு சம்பளம் கொடுக்காத கபில் சிபல் மீது சாடுகிறார் பர்க்கா.

பர்க்காவின் குற்றச்சாட்டுகளிலிருந்து சில கீழே:

“பொதுவாழ்வில் யோக்கியர் போல நடக்கும் சிபல் (Man who acts holier than though in public)” ஊடகவியலாளர்களை மோசமாக கையாள்கிறார்,

“ஏற்கனவே இருந்த வேலையை விட்டு இவரை நம்பி வந்த ஊடகவியலாளர்களை ஏமாற்றுகின்றனர் சிபலும் அவர் மனைவும்”,

“இறைச்சி ஃபேக்டரி நடத்திய இவர் மனைவியோ, ‘என் ஃபேக்டரிகளில் அறிவிப்பின்றி ஊழியர்களுக்கு ஒரு பைசா கொடுக்காமல் மூடுவேன் நான். இந்த ஊடகவியலாளர்கள் யார் என்னிடம் 6 மாத சம்பமளம் கேட்க?”

“தினமும் கோடிகளில் சம்பாதிக்கும் கபில் சிபல் தன் 200 ஊடகவியலாளர்களுக்கு தரவேண்டிய 6 மாத நோட்டீஸோ அல்லது குறைந்த பட்ச 3 மாத சம்பளமோ தர மறுக்கிறார்”

“மோடிதான் திரங்கா டிவியை நடத்த விட மாட்டேனென்கிறார் என்று மோடி மேல் பழி போட சிபலும் அவர் மனைவியும் திட்டமிடுகிறார்கள். உண்மை நிலை என்னவென்றால், மோடி அரசு எந்த விதத்திலும் தலையிடவில்லை. சிபலும் அவர் மனைவியும் திரங்கா டிவி பணியாட்களை சந்திக்கவேயில்லை. மாறாக லண்டன் சுற்றுப்பயணம் சென்றனர். எனவேதான் அவரை மல்லய்யா என்றழைத்தேன்”.

“பணியாட்களுக்காக பேசும் என் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்று மிரட்டுகிறார் சிபல். பெண் பணியாட்களை நாய்களே (“Kutiya”or Bitch) என்று மிகக்கேவலமாக திட்டுகிறார்கள் சிபலும் அவர் மனைவியும். இதை தேசிய பெண்கள் ஆணையம் விசாரிக்க வேண்டும்”

  • என்று நீண்ட ட்வீட். அதையும் தேசிய பெண்கள் ஆணைய தலைவி ரேகா ஷர்மா விசாரிப்பதாகவும், இமெயில் அனுப்பவும் என்றும் கேட்டிருக்கிறார்….

  • கூட்டுக்களவாணிகளுக்குள் பிரச்சினை… மோடி மேல் பழி கூட போடமுடியவில்லை இவர்களால். என்ன கொடுமை??? அந்த குண்டனை சிறையிலடைக்குமா பஞ்சாயத்து? நெடு நாள் ஆசை 😂

An appalling situation in @NewsHtn promoted by @KapilSibal & his wife, where more than 200 employees have had equipment confiscated and face sackings without even a 6 month pay out. Man who acts holier than though in public has treated journalists in a hideous way

Am told @KapilSibal & wife wanted to use Modi as excuse to sack staff saying Modi didnt let channel run. But to be absolutely blunt. GOI has done nothing. Husband and wife have not faced staff, went on holiday to london, while shutting shop, prompting me to call him Mallya

For fighting for rights of staff, I have been threatened with defamation and ordered to “withdraw my emails” comparing @KapilSibal to Mallya. I have refused. I support the staff of @NewsHtn and will help them fight this legally, with a criminal case and complain

Could you pl send me details on my email [email protected]

 

 

 

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...