தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு = 1 கப், வாழை – 3, தேங்காய் துருவல் = 1 மூடி,சிவப்பு மிளகாய்- 2 , மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன், அரிசி = அரை ஸ்பூன், கடுகு – அரைஸ்பூன் , உப்பு- தேவையான அளவு , தேங்காய் எண்ணெய் -2 ஸ்பூன்.
செய்முறை :
பாசிப்பருப்பை வறுத்து, வேகவைத்து,வாழைக்காயை சிறுத்துண்டாக்கி போட்டு தண்ணீர் விட்டு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வேக விடவும்.வெந்ததும் தேங்காய்த்துருவல்,அரிசி,மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து, கூட்டோடு சேர்க்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு பெருங்காயம் தாளிக்கவும்.



