
தரமான கல்விக்கு வழிகாட்டி மவுலானா அபுல் கலாம் ஆசாத்: நவம்பர் 11 தேசிய கல்வி தினம்.
“மனிதனுக்கு கல்வி அழகை அளிக்கிறது. வித்யை என்பது ரகசியமாக ஒளித்து வைக்கப்பட்ட செல்வம் போன்றது. கல்வியறிவு அனைத்து சுகங்களையும் புகழையும் வசதிகளையும் அளிக்கவல்லது.
கல்வியறிவு மனிதனுக்குக் குருவாகவும் தெய்வமாகவும் விளங்கு கிறது. வெளிநாடுகளிலும் நெருங்கிய உறவாக திகழ்கிறது. இந்த பூமியில் கல்வி அறிவுக்கு ஈடான செல்வம் வேறொன்றும் இல்லை” என்பது ஒரு பழம் பாடலின் பொருள்.
அத்தகைய மதிப்புமிகு கல்விக்கு சிறப்பான சேவையாற்றி, நாட்டில் கல்வியின் உயர்வுக்கு வழி அமைத்தவர் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்.
அவருடைய பிறந்த நாளான நவம்பர் 11 தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் 131 வது ஜெயந்தி தினம்.
இவர் சுதந்திரப் போராட்ட வீரர். இயற்பெயர் “மொஹியுத்தீன் அஹ்மது”. அபுல் கலாம் என்பது அவருக்கு அளிக்கப்பட்ட விருது. ஆஜாத் என்பது அவருடைய “கலம் பெயர்”.
ஆலியா பேகம்,கைருத்தீன் அஹம்மது தம்பதிகளுக்கு 1888 நாவம்பர் 11 இல் பிறந்தார் அபுல் கலாம் ஆசாத்.
அவர் அராபிக், ஆங்கிலம், உருது, ஹிந்தி, பெர்ஷியன், பெங்காலி முதலான பல மொழிகளில் நிபுணராகத் திகழ்ந்தார். 1958 பிப்ரவரி 22 இல் மரணமடைந்தார்.
இந்திய அரசாங்கம் 1992ல் பாரத ரத்னா விருது வழங்கி அவரை கௌரவித்தது.