
ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் கார்த்திகை மாதம் இரண்டாவது சோம வாரமான இன்று சிவஸ்தலங்கள் பக்தர்களால் நிறைந்துள்ளது.
மிகப்பெரும் சைவ க்ஷேத்திரமான ஸ்ரீசைலத்தில் விடியற்காலை 2 மணிக்கே மங்கல வாத்தியங்களுடன் பூஜைகள் தொடங்கின. புனித நதிகளில் பக்தர்கள் நீராடி ஆலயங்களில் பூஜைகளில் பங்கேற்று நதிக்கரைகளிலும் கோவில்களிலும் தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள்.

ஐப்பசி மாத அமாவாசை முடிந்த பின்னர் தொடங்கும் திங்கள் கிழமையில் இருந்தே வட மாநிலங்களில் சோமவார வழிபாடு களை கட்டிவிடும்.
தமிழகத்தில், அடுத்த திங்கள் முதல் கார்த்திகை சோம வார விரதம், பூஜைகள் பக்தர்களால் கடைப்பிடிக்கப் படும்.