10ம் வகுப்பு தேர்வு; இ பாஸ் பெற இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம்!

கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
tnepass application - 2026

கொரோனா பரவலால் எழுந்துள்ள அச்சத்தில் காரணமாக, கடந்த மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் பல ரத்து செய்யப் பட்டன. முக்கியத் தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டன. அதில் பத்தாம் வகுப்புத் தேர்வும் அடங்கும்.

இந்தத் தேர்வுகள் அடுத்த மாதம் நடத்தப் படலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள், தேர்வுக் கண்காணிப்புக்கு வரும் ஆசிரியர்கள் தேர்வு மையங்களுக்கு வருவதற்கான இபாஸ் அனுமதி பெறுவதற்கு இந்தத் தளத்தில் விண்ணப் பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு வருமாறு….

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள், பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இபாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான இணையதள லிங்கையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி https://tnepass.tnega.org/#/user/pass என்ற லிங்க் மூலம் மாணவர்கள்,ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் இபாஸ் பெறலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.