
COVID-19 என்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் சென்னை, மதுரவாயலில்உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை மற்றும் சேலம் ‘Mayas Research and Learning (OPC) Private Limited’ இணைந்து நிகழ்நிலை (Online) மூலமாக “INTERNATIONAL WEB CONFERENCE ON ‘RESPONDING TO CHANGING BUSINESS – CHALLENGES AND OPPORTUNITIES’ (COM CON 2.0)” என்ற நிகழ்ச்சி 22.5.2020,வெள்ளி அன்று காலை 10 முதல் 4 மணி வரை நடைபெற்றது.
இது உலக சாதனையாக முதன் முறையாக 6 மணி நேரமாக இடைவெளி இல்லாமல் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்க நிகழ்வில் துணை முதல்வர் மாண்புமிகு O.பன்னீர் செல்வம் அவர்களின் வாழ்த்துமடலுடன் மாண்புமிகு Dr. ஜெ.ஜெயவர்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குத்து விளக்கேற்றி சிறப்புரை ஆற்றினார்.
மேலும் சர்வதேச அளவில் 6 பேராசிரியர்கள், தேச அளவில் 11 பேராசிரியர்கள் கலந்து கொண்டு மொத்தம் 17 பேர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் 1000 மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இதற்கு உறுதுணையாக பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் மாண்புமிகு Dr.A.C.சண்முகம் அவர்கள், தலைவர் மாண்புமிகு Er.ACS. அருண்குமார் அவர்கள், துணைவேந்தர் Dr.S.கீதாலட்சுமி அவர்கள், பதிவாளர் Dr.C.B.பழனிவேல் அவர்கள், இணைப்பதிவாளர் Dr.D.B.ஜெபராஜ் அவர்கள், வணிகவியல் துறைத்தலைவர் Dr.C.B.செந்தில்குமார், துணைத்தலைவி Dr.S.பொன்முத்துமாரி, பேராசிரியர்கள், நிகழ்நிலை(Online) மூலமாக ஒருங்கிணைத்த கவிஞர்கள் தமிழியலன், இரத்தின புகழேந்தி, திரு.சேனாவரையன், அலுவலர்கள் மற்றும் அனைவரின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.
COM CON 2.0 … YouTube link :
- செய்தி: எஸ்.ஆர்.வீ. பாலாஜி