பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 18ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பங்குனி மாத பௌர்ணமியும், உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு வருகிற மார்ச் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை ( பங்குனி 4-ம் தேதி ) பங்குனி உத்திர கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 10 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிவிடும். அன்றைய தினம், முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெறும்.
பங்குனி உத்திர விழாவின் போது முருகன் கோயில்களில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதற்காக விரதமிருந்த பக்தர்கள் பால், பன்னீர், பூ காவடிகளை ஏந்தியும், கண்ண அலகு, மயில் அலகு, தேர் அலகு என பல்வேறு விதமாக அலகு குத்தியும் , முருகனின் கோயில்களுக்கு பாதயாத்திரை சென்றும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபடுவர்.
அந்த வகையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை ( மார்ச் 18ம் தேதி ) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.