02-06-2023 3:55 AM
More

  Shut up. Shall We?

  A Centenary Plus, Retold 

  Become a member

  Get the best offers and updates relating to Liberty Case News.

  ― Advertisement ―

  spot_img

  கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு!

  கரூர் அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷ நிகழ்ச்சி – நந்தி எம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால்
  Homeகல்விதொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மையா? தீமையா?: மாணவர் முன் பட்டிமன்றம்!

  தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மையா? தீமையா?: மாணவர் முன் பட்டிமன்றம்!

  கரூர், சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பட்டிமன்றம் !

  கரூர் வெண்ணெய்மலை சேரன் பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பு பட்டிமன்றம் இன்று மதியம் நடைபெற்றது. முதல்வர் பழநியப்பன் வரவேற்றார். இரு பணிகள் பெருமைமிக்கது ஒன்று டாக்டர் மற்றொன்று ஆசிரியர், இதிலும் ஆசிரியர் தான் டாக்டரை உருவாக்குகிறார். டாக்டரால் ஆசிரியரை உருவாக்க முடியாத பெருமைமிக்கவர்கள் ஆசிரியர் என்றார். தாளாளர் க.பாண்டியன் பள்ளியின் மேனால் ஆசிரியர்களை கெளரவித்து வாழ்த்துரைத்தார்.

  தொடர்ந்து இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மாணவர்களுக்கு நன்மை பயக்கிறதா? தீமை பயக்கிறதா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

  நடுவராக தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் பேசியபோது, பண்டித ஜவஹர்லால் நேருவின் விருப்பம் “குழந்தைகள் தினம்” அறிவியல் மேதை அ.ப.ஜா அப்துல்கலாம் விருப்பம் “இளைஞர் தினம்” சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் விருப்பம் “ஆசிரியர் தினம், ஆளுமையின் அடித்தளம், அறிவுதரும் சுரங்கம், ஆளுமையின் அடித்தளம் “ஆசிரியர்கள் என்றார்

  பட்டிமன்ற தலைப்பின்படி அறிவியல் தொழில்நுட்பம் மாணவர்களுக்கு ஏராளமான நன்மைகளும் தீமைகளும் தருகிறது குணம் நாடி, குற்றமும் நாடி மிகைநாடி மிக்க கொளல் மூலம் தீர்ப்பளிக்கப்படும் என்றார்

  ஆசிரியை கெளசல்யா : கல் உரசி “தீ” கண்டது முதல், எண்ணற்ற வாகனங்கள், நினைத்த இடபயணம், கிரகம் விட்டு கிரகம் பாய்தல் கற்றல், கற்ப்பித்தல் என அறிவியல் தொழில்நுட்பம் ஏராளமான நன்மையே!

  ஆசிரியை மோகனா : மனிதனின் ஆறறிவை தாண்டி ஏழாவது அறிவு தொழில்நுட்பம் இது மனிதனை மந்தநிலைக்கும், நோயாளியாகவும் ஆக்கிவிட்டது, கைபேசி கண்டுபிடித்த நோக்கம் திசைமாறிவிட்டது. நிலா காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டிய நிலைமாறி செல்போன் காட்டி சோறூட்டும் தீமை வந்துவிட்டது

  ஆசிரியர் அசோக்: முதல் அறிவே அறிவியல்தான். முற்போக்கு சிந்தனையை அறிவியல் விதைக்கின்றது. விலையின்றி விரும்பிய புத்தகம் வாசிக்க, தொழில்நுட்பம் கற்க செல், கம்யூட்டர் என தொழில்நுட்பம் நன்மைபயக்கிறது

  வேலு சந்திரன்: நாங்கள் தீமைகளை நல்ல எண்ணத்தொடுசுட்டிக்காட்டி பேசுகிறோம் நவீன அறிவியல் கொரோனா காலததில் என்ன செய்தது. கல்வித் தொலைக்காட்சி அலைவரிசை எண் எந்த மாணவருக்காவது தெரியுமா? பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகள் பல மாணவர்கள் உயிர் பலிவாங்கியிருக்கிறது

  இராஜ்மோகன்: திருச்சிற்றம்பலம் படம் பார்க்க ஆன்லைன் பதிவு துணை நின்றது. நெல் நல்விளைச்சல் பெற ஊடுருவியிருக்கும் புல்லை அகற்ற வேண்டும்
  கு.பாஸ்கர்: வாகனப்பெருக்கம் விபத்தைக் கூட்டியுள்ளது, அறிவியல் தொழில்நுட்பம் குடும்ப உறவுகளை குழைத்திருக்கிறது

  நடுவர் தீர்ப்பு :
  இரு அணியினரும் மிகச்சிறப்பாக தங்கள் அணியின் வெற்றிக்கு அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்தும். மறுத்தும், விளக்கியும் பேசினர் கொரோனா காலத்தில் கணினி அலைபேசி, கல்வித் தொலைக்காட்சி இல்லையில் பல மாணவர்கள் எண்னையும் எழுத்தையும் மறந்து இருப்பார்கள். தொழில்நுட்பத்தில் கூகுள் பே மாணவர்கல்வி கட்டணம் செலவிற்கு துணை நிற்கிறது
  கூகுளில் குவிந்திருக்கும் நூல்கள் அறிவியல் தொழில்நுட்ப நன்மையே, சிந்திக்கும் திறன் ஒப்புநோக்குச் சிந்தனை புதிய புதிய தரவுகள் உள்ளூர் செய்தி மட்டுமல்ல உலக நடப்பு அறிதல், குழுச்சிந்தனை போன்ற நன்மைகளும் ஒழுக்கம் – பண்பாடு – கலாட்சார சீரழிவின் திறவுகோலாக, நாகரிகம் என்ற பெயரில் சீரழிவுகளும், பத்து இண்டு பத்து என்றால் கூட கால் குலேட்டரை தேடும் நிலையும், நீலத்திமிங்கலம், சூதாட்ட சீரழிவும் உண்டாக்குகிறது, தொடர் பயன்பாட்டால் கண்பார்வை பாதிப்பு மூளைத்திறன் பாதிப்பு, மன அழுத்த அதிகரிப்பு போன்ற தீமைகளும் உள்ளன என்றபோதும், தீமையை தேடிப் பிடித்து கேடு தேடுவோரை திருத்தி சரியான பயன்பாட்டை பின்பற்றினால் இன்றை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மாணவர்களுக்கு “நன்மை பயக்கிறது” எனத் தீர்ப்பளித்தார்

  தொடர்ந்து ஆசிரியைகள் நாடகம், நடனம், கலைநிகழ்வு நடைபெற்றது.