கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக களம் இறங்கிய லிஸ் ட்ரஸ் அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். கடும் போட்டியை தந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்.
உலக அளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார பலம் கொண்டு நாடு என்கிற இடத்தை சமீபத்தில் இந்தியாவிடம் இழந்த இந்த வேளையில் இவர் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.
இவர் கடந்த போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.
இந்தோனேஷியாவில் G20 மாநாட்டு சமயத்தில் அவசர அவசரமாக நாடு திரும்பிய இவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தனர். இவரோடு சேர்ந்து மொத்தம் 11 பேர் இந்த போட்டியில் இருந்தனர். இதில் நம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக்குடன் சேர்ந்த பாகிஸ்தானியர் ஒருவரும் களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைக்கு ஏகப்பட்ட சவால்கள் இவர் முன் இருக்கிறது!
பிரக்ஸிட் காயம் இன்னமும் முழுமையாக ஆறவில்லை …. பொருளாதாரம் படுத்து கிடக்கிறது. ரஷ்யாவுடனான மோதலில் அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்…. எண்ணெய் மற்றும் எரிவாயு இல்லை. குளிர்காலம் வேறு வந்துகொண்டே இருக்கிறது.
உணவு தானிய கையிருப்பு குறைந்திருப்பதாக தரவுகள் சொல்கிறது. நாடு வேறு கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமியர் பிடியில் சிக்கித் தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்…… அப்படி தான் பிரிட்டன் சொல்கிறது… இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் பெரும்பாலான சர்ச் எல்லாம் இன்று இஸ்லாமியர்கள் வசம் இருப்பதாகவும்…… அவர்கள் அதனை மாற்றி அமைத்து கொண்டு இருக்கிறார்கள் என்கிறது பிரிட்டன்.
நம் இந்தியாவோடு இணக்கமான சூழ்நிலையை லிஸ் ட்ரஸ் ஏற்படுத்திக் கொள்வாரா….. நல்லவிதமாக தொடர்வாரா என்றால்…… கொஞ்சம் சிக்கல் தான் என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள். ஏற்கனவே இந்திய அரசோடு முரண்பாடு கொண்டவர்கள் இந்த கன்சர்வேடிவ் கட்சியினர்…. அது இன்று நேற்று அல்ல…… இந்திய விடுதலை போராட்ட காலத்தில் இருந்தே இதே நிலையை தான் அவர்கள் தொடர்ந்து கொண்டே வருகிறார்கள்…… இதில் என்ன புதிய மாறுதலை இவர் ஏற்படுத்திவிடமுடியும் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….. போதாக்குறைக்கு தீரா பிரச்சினைகள் நம் இந்திய தேசத்தினை தொடர்ந்து வரும் இன்றைய தேதியில்….. பல நிலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழியே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தான் என்கிறார்கள் அவர்கள்…..
அதில் விஷயம் இல்லாமல் இல்லை… உதாரணத்திற்கு
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது காஷ்மீர் மாநிலத்தினை பற்றின…. அதிலும் குறிப்பாக கில்கிட் பல்டிஸ்தான் மற்றும் கில்கிட்-வஸாரட் ஆகிய இடங்களை குத்தகையாக அவர்கள் வசம் சென்ற இடமெல்லாம் திரை மறைவில் பாகிஸ்தானுக்கு கைமாற்றி கொடுத்து விட்டு பேசாமல் ஒதுங்கி கொண்டார்கள்.
அதுமட்டுமல்ல. சீனாவோடு நமக்கு ஏற்பட்ட உரசலே இவர்களால் தான். மெக்மோகன் போட்ட கோட்டை நாங்கள் ஏற்க போவதில்லை என சீனா 1870 களிலேயே அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கிறது. அந்த இடங்கள் எல்லாம் 1847 களிலேயே ஜோரவார் சிங் மூலம் அல்லது அவர் காலத்திலேயே திபெத்திய பிராந்தியம் முழுவதும் காஷ்மீர் மன்னர் வசம் இருந்ததாக. இருப்பதாக ஆவணங்கள் சொல்கிறது. அவ்வளவும் இன்று வரை பிரிட்டன் வசம் இருக்கிறது.
கொடுத்தால் என்ன என்று கேட்பவர்களுக்கு……..சீனாவில் பற்பல இடங்களில் எல்லாம் போர் புரிந்த பிரிட்டிஷ் படையணியில் இடம்பெற்றிருந்த பலரும் சீக்கியர்கள்…… ஆவணங்கள் ஊடாக இவை மறைக்கப்பட்டு சீக்கியர்கள் தனியாக கிளர்ச்சி செய்தனர்……. பிரிட்டனுக்கு இதற்கும் சம்பந்தமில்லை….என புருடா விட்டு கொண்டு இருக்கிறார்கள்……. இன்று வரை சீனர்களுக்கு சீக்கியர்களை கண்டால் ஆகாது. இவர்களுக்கு அடுத்ததாக திபெத்தியர்களை பிடிக்காது. திபெத்திய பிராந்தியத்தை முழுமையாக பிடித்து வெற்றி கொண்டவர்கள் சீக்கியர்கள்….. ஜோரவார் சிங் தலைமையிலான படை இதனை சாதித்திருக்கிறது. அன்று அவர் பிடித்த இடங்களை தான் தங்களுடைய பகுதியில் வந்து சீக்கியர்கள் போரிட்டதற்காக, சீனா 1960 களில் அத்துமீறி நுழைந்து பிடித்து வைத்து கொண்டிருக்கிறார்கள்.
ஆவணங்கள் வெளியானால் அது பிரிட்டிஷ் படையணியில் பிரிட்டன் கட்டளையின் பேரில் நடந்த போர் என்பது ஆதாரங்களுடன் வெளிவந்து விடும் என பயப்படுகிறது இன்றைய கிரேட் பிரிட்டன்.
தேயிலை தோட்டம் இருந்த இடங்களில் எல்லாம் கஞ்சா செடியை நட்டு வளர்த்த கிராதகர்கள் இந்த பிரிட்டானியர் என்கிறது சரித்திரம்.
எப்படி அன்று வர்த்தகம் என்கிற பெயரில் நாட்டுக்குள் நுழைந்து நம்மை பதம் பார்த்தார்களோ ….. அதுபோலவே இன்று அவர்கள் ஒரு கை பார்த்து விடுவோம் என சூளூரைத்து கதக்களி ஆடி கொண்டிருக்கிறார்கள் சீனர்கள்.
போகட்டும் நம் விஷயத்திற்கு வருவோம்.
வங்காள விரிகுடாவில் கோகோ தீவு…. இந்திய பெருங்கடல் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவு…. மாலத்தீவு….. அவ்வளவு ஏன் இலங்கை வரை அனைத்தையும் இந்திய வசம் முறையாக ஒப்படைக்காமல் வேண்டும் என்றே ஒதுங்கி கொண்டது பிரிட்டன்.
தற்போது உள்ள நம் இந்திய அரசு தரப்பில் இங்கிலாந்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட பற்பல அந்நாளைய சேஷ்டைகள் வெளி வர ஆரம்பித்தது. லேடி மௌட் பேட்டன் என கௌரவமாக சொல்லும் கடிதப் போக்குவரத்து எல்லாம் அம்பலமாக ……பதறிப் போன அரசு குடும்பம் பல்வேறு விதமான தடைகளை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்.
அவ்வளவு முடை நாற்றம்., இரண்டு பக்கமும்…… அங்கு அரசு குடும்பம்….. இங்கு நேரு குடும்பம்…. கடைசி வரைக்கும் மௌண்ட் பேட்டன் அயர்லாந்தில் எப்படி இறந்தார்…. இந்த கொலைக்கு யார் காரணம்…… எது காரணம் என இன்று வரை யாருக்கும் தெரியாது.
காஷ்மீர் விவகாரத்தில் உள்ள இடத்தை பற்றிய தகவல்களாவது மூடிய அறைக்குள் விவாதிக்க அனுமதியுங்கள் என நம் தரப்பில் கேட்டு கொண்ட போதும் விடாப்பிடியாக நிற்கிறது இங்கிலாந்து….. இதன் பின்னணியில் வேறோர் தகவலும் உண்டு……..
அது நம் இந்திய தேசத்தின் வளர்ச்சியை கண்டு பற்பல மேலை நாடுகளில் உள்ளூர புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்… இந்திய பொருளாதாரம் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியதை கூட நம் முன்னாள் காலணியாதிக்க நாடு ஒன்று என செய்தி வாசித்திருக்கிறார்கள் என்றால்…… எத்தனை நெஞ்சழுந்தம் இருக்க வேண்டும் அவர்களுக்கு… கிங்கணகிராதகர்கள்.
இத்தனை அமளி துமளிக்கு நடுவினில் தான் லிஸ் ட்ரஸ் வரவு பலராலும் கவனிக்க படுகிறது… பார்க்கலாம் இவர் எப்படி கையாளுகிறார் என்று..
- ”ஜெய் ஹிந்த்” ஸ்ரீ ராம்