திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டிருக்கிறார்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று வெளியிட்ட நியமன் அறிவிப்பில் , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு கே பிச்சுமணி துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்!
இவர் 37 வருடங்கள் ஆசிரியப் பணியில் இருந்தவர் என்றும், மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் சிஎஸ்ஐஆர் வேதியியல் துறையில் பணியாற்றியவர்; இவர் தாய்பே டோக்கியோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஜப்பான் -ல் விசிட்டிங் புரொபசராக உள்ளவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் மதுரை காமராஜ் பல்கலை கழகத்தின் சிண்டிகேட் மற்றும் செனட்டில் இருந்துள்ளார்! மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார் 190க்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியுள்ளார்! வேதியல் பிரிவில் விருது வாங்கியுள்ளார்!
தற்போதைய துணைவேந்தர் கி.பாஸ்கரன் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பல்கலை., அளவில் பிரிவு உபசார விழா நாளை வெள்ளிக் கிழமை நடைபெறுகிறது.




