
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHAI , காலியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலாளர் மற்றும் இந்தி அதிகாரி காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேலாளர் மற்றும் இந்தி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் NHAI இன் அதிகாரப்பூர்வ தளமான nhai.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 24, 2022 ஆகும்.
இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு மூலம், நிறுவனத்தில் 6 பணியிடங்கள் நிரப்பப்படும். தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களை தெரிந்துக் கொள்ளவும்.
காலியிட விவரங்கள்
துணை பொது மேலாளர் (சட்டம்): 1 காலியிடம்
மேலாளர் (சட்டம்): 4 காலியிடம்
இந்தி அதிகாரி: 1 காலியிடம்
தகுதி
மேலே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரிவான அறிவிப்பை NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
எங்கு விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தின் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பிரிண்ட்-அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பரிந்துரைக்கப்பட்ட ‘சரிபார்ப்புச் சான்றிதழ்’ மற்றும் கடந்த ஐந்து (05) ஆண்டுகளின் APARகள்/ACRகளின் நகல்களும் தேவை. இந்த ஆவணங்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHAIக்கு அனுப்பவும்.
ஆவணங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
NHAI- DGM (HR &Admn.)-IA, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், பிளாட் எண்: G – 5 & 6, Sector – 10, Dwarka, New Delhi – 110075.
மேலும் தொடர்புடைய விவரங்களுக்கு NHAI இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்க்கவும்.