spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்புது தில்லி மேக்ஸ் மருத்துவமனையில் என்ன நடந்திருக்கும்? மருத்துவனின் பார்வை

புது தில்லி மேக்ஸ் மருத்துவமனையில் என்ன நடந்திருக்கும்? மருத்துவனின் பார்வை

- Advertisement -

புது தில்லி மேக்ஸ் மருத்துவமனையில் என்ன நடந்திருக்கும்?

ஒரு குழந்தை நல மருத்துவனின் அறிவியல் ரீதியான பார்வை…

மருத்துவர் அருண்குமார்,
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.

முன்குறிப்பு:

தவறு செய்த மருத்துவமனையையும், மருத்துவர்களையும் வக்காலத்து வாங்க இந்த பதிவு எழுதப்படவில்லை.
இது போன்ற பிரச்சனைகள் நாளை உங்கள் குடும்பத்தில் கூட நடக்கலாம்.
அதன் அறிவியல் பின்னணியை சற்று புரிந்து கொள்வது நலம் பயக்கும். பல உயிர்களை காக்கும்.

வணக்கம்,

கடந்த வாரத்தில் புது தில்லி மேக்ஸ் மருத்துவமனையில் ஒரு பச்சிளம் குழந்தை தவறாக இறந்தது என்று அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் அரசியல் சாடல்களையும் ஏற்படுத்தி உள்ளது.

முதலில், நான் தமிழ்நாட்டில் ஈரோட்டில் ஒரு மூலையில் இருக்கிறேன். எனக்கும் புது தில்லிக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தேன்.

தினம் தினம் தொலைக்காட்சியிலும், நாளிதழ்களிலும் வரும்,

டாக்டர் மேல் negligence வழக்கு,
மருத்துவமனை அடித்து நாசம்,
தவறான சிகிச்சையால் நபர் உயிரிழந்ததாக ரோட்டில் தர்ணா,
என்பது போல வரும் ஒரு செய்தியாகத்தான் முதலில் பார்த்தேன்.

பிறகு,

மருத்துவரின் மேல் கொலைக்குற்ற வழக்கு பதிவு,
மருத்துவமனை மூட உத்தரவு,

போன்ற செய்திகளை பார்த்த பிறகு பகீர் என்றது.

நானும் ஒரு குழந்தை நல மருத்துவன் என்கிற முறையில், இந்த செய்தி என்னை மிகவும் பாதித்தது.

ஆட்சி செய்பவர்கள், நீதி துறையினர் என்றைக்கு அறிவியலையும் உண்மையையும் பார்க்காமல், மக்களின் கோப தாபங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கிறார்களோ,
செய்தி துறை என்றைக்கு உண்மையை கூற விரும்பாமல், பரபரப்பை ஏற்படுத்த விழைகிறதோ,
அன்று அந்த சமூகத்திற்கு அழிவு ஆரம்பித்து விட்டதாகவே எண்ணுகிறேன்.

இந்த செய்திகள் வரும் இணைய பக்கங்களில் பார்க்கும்போது,

எல்லா மருத்துவர்களையும் தூக்கில் போடு!
எல்லா மருத்துவமனைகளையும் இழுத்து மூடு!

போன்ற வீராவேச வசனங்களை பார்க்க முடிகிறது.

உணர்ச்சிவசப்படாமல், இந்த விஷயத்தில் நடந்திருக்க வாய்ப்பிருக்க கூடிய விஷயங்களை சற்றே அறிவியல் ரீதியாக அலசுவோம்.

22 வாரம் ஆன இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன.
ஒன்று பிறந்தவுடன் இறந்து விடுகிறது.
இன்னொன்றும் பிறகு இறந்ததாக கூறி பெற்றோரிடம் ஒப்படைக்க படுகிறது.

இடுகாட்டிற்கு செல்லும் வழியில், ஒரு குழந்தைக்கு கை கால்
அசைவு இருந்ததால், வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஐ சி யூ வில் செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டு, 5 நாட்கள் கழித்து இறந்து போகிறது.

குழந்தை இறந்ததாக சொல்லி, இடுகாட்டிற்கு அழைத்து செல்லும் வழியில், குழந்தை உயிரோடு இருப்பதை பார்ப்பதை விட பெரிய கஷ்டம் பெற்றோருக்கு இருக்க முடியாது.

மிகவும் வருந்துகிறேன்.

கவனக்குறைவாக இருந்த மருத்துவர் மேலும் மருத்துவமனை மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால், இதில் மருத்துவர் மேல் கொலைப்பழி சாற்றப்பட்டுள்ளது.

கொலைப்பழி சாற்றும் முன் சில விஷயங்களை அலச வேண்டும்.

  1. அடிப்படையில், ஒரு மருத்துவரின் கடமை நோயை குணப்படுத்துவது / இறப்பதில் இருந்து காப்பாற்றுவது.

எதிரியே ஆனாலும், மருத்துவர் யாரும் எவரையும் கொல்ல நினைப்பதில்லை.
மருத்துவர் கொலைகாரர் இல்லை.

நாங்களும் உங்களுடன் படித்து, வளர்ந்து, பழகி, நீங்கள் வாழும் அதே சமூகத்தில் வாழும், இரத்தமும் சதையும் மனசாட்சியும் கொண்ட அற்ப பிறவிகள் தாம்.

உயிரோடு இருக்கும் ஒரு குழந்தையை இறந்ததாக கூறி ஒப்படைக்க வேண்டிய அவசியமோ, எண்ணமோ ஒரு மருத்துவருக்கு ஏன் இருக்க வேண்டும்?

  1. அப்படி இறந்து போனது என்று தவறாக கூறியிருக்க காரணம் என்ன இருக்கலாம்?

அதற்கு, இறப்பு என்பதை ஒரு மருத்துவர் எப்படி உறுதிப்படுத்துவார் என்பதை முதலில் கூறுகிறேன்.

மற்ற சில நாடுகளில் இருப்பது போன்று “இறப்பு” என்பதற்கு சட்ட ரீதியான விளக்கம் இந்தியாவில் இல்லை.

இ பி கோ 46 இல், The word “death” denotes the death of a human being, unless the contrary appears from the context என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இறப்பு என்றால் மனிதன் இறந்து போவது என்று சட்டம் கூறுகிறது. ( நல்ல விளக்கம் அல்லவா??? )

பின், 1994 இல் வந்த உறுப்பு தானம் சட்டம் “deceased person” means a person in whom permanent disappearance of all evidence of life occurs, by reason of brain-stem death or in a cardio-pulmonary sense, at any time after live birth has taken place” என்கிறது.
அதாவது, இருதய / மூச்சு அல்லது மூளை நிரந்தரமாக செயலிழந்து போவதை இறப்பு என்கிறது சட்டம்.

இதை எப்படி ஒரு மருத்துவர் உறுதி படுத்துவார்?

இதற்கு பொதுவாக Harvard’s criteria of assessing death என்பது பின்பற்றபடுகிறது.

  1. Cessations of heart beating – ஸ்டெதெஸ்கோப் வைத்து இதய துடிப்பு இருக்கிறதா என்று 5 நிமிடம் தொடர்ந்து பார்க்க வேண்டும். இது 5 நிமிட இடைவெளி விட்டு 3 முறை ரிபீட் செய்ய வேண்டும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது – ECG எனப்படும் electro cardio gram எடுப்பது கட்டாயம் அல்ல.

  2. Cessation of breathing – ஸ்டெதெஸ்கோப் வைத்து மூச்சு வருகிறதா என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.

  3. Cessation of brain activity – pupil எனப்படும் கரு விழி சுருங்கி விரியாமல், டார்ச் அல்லது ஏதேனும் ஒளிக்கு ரியாக்ட் செய்யாமல் ஒரே மாதிரியாக விரிந்தே இருப்பது, corneal reflex இல்லாமல் இருப்பது மூளை செயல்படவில்லை என்பதை குறிக்கிறது. EEG எனப்படும் electro encephalo gram செய்தும் இதை உறுதி செய்யலாம் – கட்டாயம் அல்ல.

இந்த 3 criteria வைத்து தான் இறப்பு உறுதிப்படுத்த படுகிறது.

(Brain stem death – மூளை சாவு என்று ஒன்று உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் விளக்கம் தேவையில்லை. )

இதில் ஒரு விதி விளக்கு உள்ளது.

அது தான் “suspended animation”.

Suspended animation is a condition, wherein the vital functions of body (heartbeat and respiration) are maintained at a low pitch reduced to a minimum for sometime, that they cannot be detected by routine methods of clinical examination.

https://en.wikipedia.org/wiki/Suspended_animation
https://gmch.gov.in/e-study/e%20lectures/Forensic/Death.pdf

அதாவது, இதய துடிப்பு, மூச்சு, மூளை செயல்பாடுகள் சில காரணங்கள் காரணமாக, சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் சாதாரண பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நின்று போயிருக்கும்.

இது எப்போதெல்லாம் நடக்கிறது,

newborn infants – பிறந்த குழந்தைகள் – அதிலும் குறைப்பிரசவ குழந்தைகள்,
Drowning – நீரில் மூழ்கும்போது,
Electrocution – மின்சாரம் தாக்கப்பட்டவர்கள்,
Cholera – காலரா நோயினால் கடும் நீர்சத்து குறைபாடு,
frozen coma – பனி பிரதேசங்களில் விபத்தில் சிக்கி கொள்வது,
after anaesthesia – மயக்க நிலையில்,
Shock – இரத்த ஓட்ட குறைபாடு,
Sun-stroke – கடும் வெயில் தாக்கம்.

இந்த சூழ்நிலைகளில் சில உடல் இரசாயன மாற்றங்கள் காரணமாகவோ, உடல் குளிர்ந்த நிலையில் இருப்பதினாலோ, உடல் செயல்பாடுகள் சில நிமிடங்கள் ஸ்தம்பித்து போய்விடுகின்றன. அந்த நிலையில் இதய துடிப்போ, மூச்சு விடுதலோ, மூளை செயல்பாடு அறிகுறிகளோ இருப்பதில்லை. அப்போது பரிசோதனை செய்தால், உயிர் இல்லாதது போன்றே தோன்றும்.

இது ஒன்றும் புதிதல்ல. சென்ற நூற்றாண்டில் இடு காடு சென்றவர்கள் பிழைத்து வந்த சம்பவங்கள் நிறைய நடந்ததால், சவப்பெட்டியில் இருந்து வெளிப்புற மக்களை அழைக்க தனி பைப் எல்லாம் வைத்து தயாரிக்க பட்டன.

பார்க்க – படம்:
https://commons.wikimedia.org/wiki/File:Krichbaum_coffin.jpg

இவை பின்னாட்களில் கூர்ந்த சோதனைகள் மூலம் பெரிதும் தவிர்க்க பட்டன.

ஆனால், இப்போதும் அவ்வப்போது இந்த சம்பவங்கள் நடக்கின்றன.
நாம் கூட பல முறை செய்தி தாள்களில் பார்த்திருப்போம். சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் போது, நபர் எழுந்து தண்ணீர் கேட்டார் என்றெல்லாம்.

இதே போல் இன்னொரு சம்பவம் தில்லி அரசு மருத்துவமனையில் 5 மாதங்களுக்கு முன் நடந்தது.
https://www.hindustantimes.com/delhi-news/delhi-first-declared-dead-premature-newborn-dies-35-hrs-later-at-safdarjung-hospital/story-Nvt31pHkik3W6UOT9iPy7H.html

உலகின் வேறு பல இடங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

https://www.huffingtonpost.com/2012/08/09/luz-milagros-veron-morgue_n_1761905.html
https://www.deseretnews.com/article/35819/MIRACLE-CHILD-LOOKS-TO-BRIGHT-FUTURE-1-YEAR-AFTER-AN-ICY-DEATH.html?pg=all
https://www.huffingtonpost.com/2012/06/07/brazilian-boy-comes-back-to-life_n_1578283.html

இதை தவிர்க்க, சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளில் எப்போதும் போல் இல்லாமல், நெடு நேரம் உயிரின் அறிகுறிகள் இருக்கின்றனவா என்று கவனிக்க வேண்டும்.

நான் படித்த அரசு மருத்துவமனையில் இது போன்ற மிகவும் எடை குறைந்த குறைப்பிரசவ குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டால், கிட்டத்தட்ட 3 முதல் 6 மணிநேரம் பொறுத்திருந்து, பல முறை உயிரின் அறிகுறிகள் இருக்கிறதா என்று உறுதி படுத்தப்பட்ட பிறகே, பெற்றோரிடம் இறுதியாக தகவல் தெரிவிக்கப்படும்.

இதை செய்ய மேக்ஸ் மருத்துவர்கள் / செவிலியர்கள் தவறி விட்டனர் போன்று தெரிகிறது. இது தவறு.

  1. இந்த சம்பவத்தில் இன்னொரு அதி முக்கிய விஷயம் – குழந்தையின் maturity எனப்படும் கர்ப்பகாலம்.

இந்த குழந்தை 22 வாரமும் 500 கிராமிற்கும் கீழே எடையும் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இங்கு தான் சிக்கலே ஆரம்பிக்கின்றது.

ஒரு குழந்தை பிறந்து உயிருடன் இருக்க குறைந்த பட்சம் இத்தனை வாரங்கள் கருவில் இருக்க வேண்டும் என்று அறிவியல் ரீதியாக வரைமுறை இருக்கிறது. இதற்கு பெயர் தான் fetal viability.

நான் MBBS படிக்கும்போது (15 வருடம் முன்னால்), 28 வாரம் கர்ப்ப காலம் அல்லது 1 கிலோ எடை மேலே இருந்தால் தான் ஒரு கரு viable அல்லது உயிர் பிழைக்க தகுதியானது என்று புத்தகங்களில் இருந்தது.

Neonatology எனப்படும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை துறையில் மாபெரும் வளர்ச்சி, ventilator எனப்படும் செயற்கை சுவாசம், surfactant போன்ற பல அறிவியல் முன்னேற்றங்களால் இந்த காலத்தகுதி குறைந்து கொண்டே வருகிறது.

பிழைக்காது என்று முன்னர் எண்ணியிருந்த 800, 900 கிராம் குழந்தைகள் பிழைத்து வந்து, முதல் பிறந்த நாளிற்கு கேக் கொடுக்கும் போது கிடைக்கும் ஆனந்தமே தனி.

தற்போது, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வரைமுறைகள் என்ன கூறுகின்றன என்றால் – 23 வாரம் கர்ப்ப காலம் அல்லது 400 கிராம் எடைக்கு மேல் ஒரு குழந்தை பிறந்தால் அது viable என்றும், அதற்கு .குறைந்து ஒரு குழந்தை பிறந்தால், அந்த குழந்தையை resuscitate (செயற்கை சுவாசம் / இதய துடிப்பை சீராக்குதல் ) செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிடுகின்றன. பெற்றோர் கேட்டுக்கொண்டால் மட்டும் resuscitate செய்யலாம் என்ற விதி உள்ளது.

உலகிலேயே 22 வாரம் கீழ் பிறந்த இரண்டே குழந்தைகள் தான் இது வரை காப்பாற்ற பட்டுள்ளன.
இந்தியாவில் மும்பையில் ஒரே ஒரு குழந்தை 22 வாரத்தில் பிறந்து காப்பாற்றப்பட்டது. ஆனால் அந்த குழந்தையும் 650 கிராம் எடை இருந்தது.

இந்தியாவில் fetal viability ஐ முடிவு செய்ய சட்டம் இல்லை. பல மாற்று கருத்துகள், சந்தேகங்கள் உள்ளன.

https://timesofindia.indiatimes.com/city/mumbai/22-to-24-week-foetus-in-grey-zone/articleshow/5446701.cms

MTP சட்டம் – 1971 படி, 20 வாரம் வரை அபார்ஷன் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, 20 வாரம் கீழ் ஒரு கரு பிறந்தால் – அது அபார்ஷன் எனப்படும். பிறக்கும் குழந்தை அபார்டஸ்-abortus என்றழைக்கப்படும். அந்த கருவிற்கு கை கால் அசைவு இருந்தாலும் சிகிச்சை அளிக்க தேவை இல்லை. ஏனென்றால், என்ன செய்தாலும் தற்போதைய மருத்துவ வசதிகளில் அந்த கருவை காப்பாற்ற முடியாது.

சில சமயங்களில் கோர்ட்களில், 24 வாரம் கரு கூட அபார்ஷன் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

24 வாரம் கரு வரை அபார்ஷன் செய்து கொள்ளலாம் என்று புது MTP சட்டம் 2017இல் ஆகஸ்டு மாதம் ராஜ்ய சபாவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.
https://indianexpress.com/article/india/j-p-nadda-amendment-to-mtp-act-proposed-before-cabinet-govt-4584104
https://164.100.24.219/BillsTexts/RSBillTexts/AsIntroduced/MTP-4817-E.pdf

இந்த சட்டத்தின் படி பார்த்தால், ஒரு 22 வார கரு பிறந்தால், பெற்றோர் கேட்டு கொண்டால் ஒழிய அந்த கருவை காப்பாற்ற முயற்சி எடுக்க தேவை இல்லை. ஏனெனில் அது அபார்ஷன் வகையராவில் வரும்.

இப்போது சொல்லுங்கள் – இதே 22 வார கருவை ஒருவர் கருக்கலைப்பு செய்தால், அந்த பெற்றோர் மீதும், மருத்துவர் மீதும் கொலைப்பழி சுமத்தப்படுமா?

அந்த 22 வார கருவை resuscitate செய்ய பெற்றோர் விரும்பினாலும், அக்குழந்தை பிழைக்கும் வாய்ப்பு 1 சதவீதத்திற்கும் குறைவு. 3, 4 மாதங்களுக்கு மேல் பச்சிளம் குழந்தை ஐ சி யு வில் இருக்க வேண்டி வரும். அப்படியே பிழைத்தாலும், மூளை வளர்ச்சி குறைபாடு, கண் பார்வை குறைபாடு போன்ற தீவிர பிரச்சனைகள் வாழ்நாள் முழுதும் குழந்தையை வாட்டும்.

இந்த காரணங்கள் கருதி, இதுபோல மிகச்சிறிய / மிகக்குறைந்த வாரங்கள் கர்ப்ப காலம் கொண்ட குழந்தை பிறந்தால், பெரும்பாலும் குழந்தை நல மருத்துவர் பெற்றோரிடம் சாதக பாதகங்களை எடுத்து கூறி, ஐ சி யு வில் தீவிர சிகிச்சை அளிப்பதை ஆதரிக்க மாட்டார்கள்.

இந்த மேக்ஸ் பிரச்சனையிலும், பச்சிளங்குழந்தை நல மருத்துவர்கள் DNR – do not resuscitate எனப்படும் ‘செயற்கை சுவாசம் அளிக்க வேண்டாம்’ என்று பெற்றோரிடம் ஒப்புதல் வாங்கியதாக தெரிகிறது.

அவர்கள் செய்த ஒரே தவறு suspended animation போன்ற விஷயங்களை மனதில் கொண்டு மேலும் சில மணி நேரங்கள் பொறுத்திருந்து குழந்தை இறந்து விட்டதா என்று உறுதி படுத்தியிருக்க வேண்டும்.

இறந்தது என்று கூறிய குழந்தை, கை கால் ஆட்டும் கோர நிகழ்வை பெற்றோர் பார்க்கும் துயரத்தை கொடுத்திருக்க கூடாது.

ஆனால், மருத்துவத்தில் நடக்க வாய்ப்பிருக்க கூடிய இது போன்ற தவறுக்கு ஒரு மருத்துவமனையையே மூடுவது, கொலை குற்ற வழக்கு பதிவு செய்வது – மருத்துவர்களை இது போன்ற சீரியஸ் பிரச்சனை இருக்கும் குழந்தைகளை அட்மிட் செய்ய தயக்கத்தை கொடுக்கும். ஏண்டா நமக்கு வம்பு என்று விலகி போக வைக்கும்.

நாளை எங்கேனும் ஒரு சீரியஸ் குழந்தை பிழைக்க வைக்க வாய்ப்பிருந்தும், இது போன்ற சட்ட சிக்கல்களுக்கு பயந்து, சிகிச்சை கிடைக்கப்பெறாமல் போகலாம்.

ஐ ஐ டி யில் படித்த கெஜ்ரிவால் ஆளும் அரசாங்கம் கூட இது போன்ற அவசர / அறிவியல் ஆதரமில்லாத முடிவுகளை எடுக்கிறது.

இப்படி எல்லா மருத்துவமனைகளையும் இழுத்து மூடி விட்டால், நாளை 26 வார பச்சிளம்குழந்தை பிறந்தால் பச்சிலை கட்டி பானையில் வைத்தா பிழைக்க வைக்க முடியும்?

இது போன்ற அவசர / சென்டிமென்ட் சார்ந்த முடிவுகளை விட்டுவிட்டு, அரசு உருப்படியான தீர்வை நோக்கி செல்வது மருத்துவ துறைக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது.

சரி, எல்லாம் அலசி ஆராய்ந்து விட்டோம்.

இதில் என் மனதில் இருக்கும் இறுதி கேள்விகளை பார்ப்போம்.

  1. குழந்தை 22 வாரமே ஆன கரு. இந்த குழந்தை பிறந்த பின், செயற்கை சுவாசம் கொடுப்பதா வேண்டாமா?

  2. சரியான சட்ட அல்லது மருத்துவ வரைமுறைகள் இந்தியாவில் இல்லாத போது ஒரு குழந்தை நல மருத்துவர் எதை வைத்து இந்த விஷயத்தில் ஒரு முடிவெடுப்பார்?

  3. உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாத இந்த கரு பிறந்த பின், தேவை இல்லாமல் ventilator போன்ற செயற்கை சுவாசத்தில் வைப்பது சரியா ? அப்படி வேண்டாம் என்று முடிவெடுத்தால், அது medical ethics படி அது சரிவருமா ?

  4. அப்படி தேவை இல்லாமல் இந்த கருவை சில நாட்கள் செயற்கை சுவாசத்தில் வைத்து பின்னர் இறந்து போனால், இதே சமூகம், பிழைக்க வாய்ப்பில்லாத குழந்தையை தேவை இல்லாமல் ஐ சி யு வில் வைத்து பணம் புடுங்குகிறார்கள் மருத்துவர்கள் / தனியார் மருத்துவமனைகள் என்று கூக்குரல் எழுப்பாதா?

  5. அந்த குறிப்பிட்ட மருத்துவமனை / மருத்துவர் பணம் புடுங்க வேண்டும் என்று நினைத்திருந்தால், இன்னும் 5, 6 நாட்கள் மேக்ஸ் மருத்துவமனை ஐ சி யு விலேயே வைத்திருக்கலாமே ? ஏன் செய்யவில்லை ?

  6. suspended animation போன்ற அறிவியல் ரீதியான விஷயங்கள் தவறான இறப்பு செய்திக்கு காரணம் இருக்க, இது மனித தவறு எனப்படுமா அல்லது கொலைக்குற்றம் எனப்படுமா?

  7. நாளை இது போல இன்னொரு பிழைக்க வாய்ப்பில்லாத ஓர் extreme premature குழந்தை பிறந்தால், ஒரு குழந்தை நல மருத்துவனாக நான் என்ன செய்ய வேண்டும் என்று இந்த சமூகம் / நீதி துறை / அரசாங்கம் / மீடியா எதிர்பார்க்கிறது?

மேற்கூறிய கேள்விகளை எல்லாம் யாராவது தெளிவு படுத்தினால், எனக்கும் மேலும் நம் நாட்டின் பல குழந்தை நல மருத்துவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்று கை கூப்பி விண்ணப்பிக்கிறேன்.

நன்றி,

மருத்துவர் அருண்குமார்,
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.

பின் குறிப்பு :

ஆரோக்கியமாக பதில் அளிக்கவும் விவாதிக்கவும் விரும்பினால் மட்டும் கமென்ட் செய்யவும். வசை பாட விரும்பினால் அதற்கான இடம் இந்த பதிவு இல்லை. வசைக்கு பதிலளிக்கவும் பொறுமையும் நேரமும் எனக்கில்லை.புது தில்லி மேக்ஸ் மருத்துவமனையில் என்ன நடந்திருக்கும்?

ஆரோக்கியமாக பதில் அளிக்கவும் விவாதிக்கவும் விரும்பினால் மட்டும் கமென்ட் செய்யவும். வசை பாட விரும்பினால் அதற்கான இடம் இந்த பதிவு இல்லை. வசைக்கு பதிலளிக்கவும் பொறுமையும் நேரமும் எனக்கில்லை. Very cogent arguments.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe