spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்வந்தேறிகளின் வம்பு பிரச்சாரம்! விளைவுகள்! உண்மைகள்! கிறிஸ்துவர்களின் சொர்க்கப் பித்தலாட்டம்!

வந்தேறிகளின் வம்பு பிரச்சாரம்! விளைவுகள்! உண்மைகள்! கிறிஸ்துவர்களின் சொர்க்கப் பித்தலாட்டம்!

- Advertisement -

வந்தேறிகளின் வம்பு பிரச்சாரம்! விளைவுகள்! உண்மைகள்! – part -15
தெலுங்கில்: பி எஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

Xtians only will be taken to Heaven,
rest are all sinners and will go to Hell.
“கிறிஸ்தவ மத விசுவாசிகளே சொர்க்கத்திற்கு செல்வார்கள். மற்றவர்கள் பாவிகள்! நரகத்தை அடைவார்கள்.”

அறிஞர்கள் இந்த சொர்க்கம் என்ற மாயையில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கையில் பாமரர்கள் மட்டும் கிறிஸ்துவ சுயநலத் தீயில் விட்டில்பூச்சிகளாக விழுந்து மாய்கிறார்கள்,

உலகெங்கும் கிறிஸ்தவர்களாக அறிவித்துக் கொண்டவர்கள் மிகப் பெருமளவில் குறைந்து வருகிறார்கள் என்று பிரபல பத்திரிக்கை நியூயார்க் டைம்ஸ் ஒரு கட்டுரை வெளியிட்டது. ‘காலப்’ என்ற சர்வதேச சர்வே அறிவித்த கருத்துக்கணிப்பு ஆய்வின்படி சர்ச்சுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததோடன்றி கடவுள் மீது விசுவாசம் இல்லை என்று கூறுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட அதிகமாக உள்ளது.

“அமெரிக்கர்களில் எத்தனை பேருக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது?” என்று டாக்டர் ‘ஜாக் ஹைநோஸ்கி’ அளித்த கணக்குகள் இன்டர்நெட்டில் கிடைக்கிறது. மூன்று விதங்களாக கேட்ட கேள்விகளுக்கு அமெரிக்க குடிமக்கள் அளித்த பதில்களை ஆதாரமாகக் கொண்டு இந்த கட்டுரையை டாக்டர் ஜாக் எழுதியுள்ளார். அதில் 64% பேர் மட்டுமே கடவுளின் இருப்பை நம்புபவர்கள்.

“என் வாழ்க்கையில் மதத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது” என்று கூறுபவர்கள் 1993ல் 58% இருக்கையில் அது 2019ல் 49% ஆக குறைந்தது என்று ‘காலப்’ கணக்கெடுப்பு கூறுகிறது.

பிராடெஸ்டென்ட், கத்தோலிக்கர்களில் அவரவர்களுக்கு பிடித்த கிறிஸ்தவ பிரிவைப் பற்றிக் கூட இந்தக் ‘காலப்’ சர்வே 2019 ரிசல்ட்களை வெளியிட்டது. 2019ல் 35% பேர் குடிமக்கள் பிராடஸ்டன்டாக பதிவு செய்துகொண்டார்கள். (இது 1964 ம் ஆண்டில் 74 சதவிகிதம்)

“சொர்க்கத்துக்கு வாருங்கள்!” என்று வரவேற்று பிரச்சாரம் செய்யும் சர்ச்சுகளை, கல்வியாளர்களும் மேற்கத்திய மக்களும் “கோ டு ஹெல்!” என்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார்.

அதனால் பாரத தேசத்தின் மீது அவர்களின் பாவப் பார்வை பட்டது. கடந்த மூன்று தசாப்தங்களாக ரோமன் கத்தோலிக்கர்கள் இந்தியர்களின் மீது தம் தந்திரங்களை உபயோகிக்கின்றனர். அவர்கள் தங்களின் பூஜை விதானங்களை ‘பாரதியம்’ செய்வதன் மூலம் அப்பாவிகளை மதம் மாற்றுகிறார்கள். 1970 ஏப்ரல் ‘பாஞ்சஜன்யம்’ பத்திரிக்கையில் அன்றைய ஆசிரியர் ஸ்ரீதேவேந்திரா கேட்ட கேள்விக்கு ஸ்ரீகுருஜி இவ்வாறு பதிலளத்தார்…

“பூஜை விதானங்களை ‘பாரதியம்’ செய்வதைவிட சர்ச்சுகளையும் பிரச்சாரகர்களையும் முழுமையாக பாரதியம் செய்வது மிகவும் முக்கியம். பூஜை விதானங்களை மாற்றுவது மத மாற்றங்களை தீவிரம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு போர் நீதியாக இருக்கலாம். முதலில் அப்படி நடந்தது. 10வது நூற்றாண்டில் ‘ராபர்ட் டி நோபுலே’ என்ற ஐரோப்பா பிரச்சாரகர் இங்கு வந்தார். அவர் பிராமணரைப் போல் வேடம் தரித்தார். பூணல் கூட அணிந்தார். தன்னை ‘கிறிஸ்தவ பிராமணன்’ என்று அழைத்துக்கொண்டார். கிறிஸ்து வேதம் என்று பிரச்சாரம் செய்தார். இதெல்லாம் பாமரர்களான, தர்ம நிஷ்டர்களான ஹிந்துக்களை தம் மதத்தின் வலையில் சிக்க வைப்பதற்காக செய்தவையே! இந்த நூதன வழிமுறையின் பின்னால் இப்போது கூட இதே முயற்சி இருக்கலாம். வெளிநாட்டு பிரச்சாரகர்களை வரவழைப்பதை நிறுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து பணம் பெறக்கூடாது. எங்கெங்கு வெளிநாட்டு கிறிஸ்தவ பிரச்சாரம் பலிக்கிறதோ அந்தந்த பிரதேசங்களில் பிரித்தாளும் போக்கு ஏன் வலுப்படுகிறது? இந்த கேள்விக்கு பதிலை அவரவர்களே தேடிக் கொள்ள வேண்டும்”.

சுதந்திரம் வந்த பின் மத மாற்றங்களின் மேல் அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எடுக்காததோடு அல்லாமல் மைனாரிட்டியாக அவர்களுக்கு வளர்ச்சியும் ஊக்கமும் கொடுத்த காரணத்தால் (ஈசான்ய) வடகிழக்கு மாநிலங்கள் பல கிறிஸ்தவ மெஜாரிட்டியாக மாறின.

2011ம் ஆண்டில் தெலுங்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் தங்களுக்கான ரிசர்வேஷன்கள் போய்விடுமோ என்ற அச்சத்தில் மதத்தை தவறாக பதிவு செய்துகொண்டதால் 1971ல் 4.2 சதவிகிதம் இருந்த கிறிஸ்தவர்களின் தொகை 2011ல் 1.5% ஆக குறைந்தது. (விக்கிபீடியாவில் இதற்கான காரணம் இடம்பெயர்வும் குடும்பக் கட்டுப்பாடும் என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கது).

டாக்டர் கௌதம் சென் (லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ், பொலிடிகல் சயின்ஸ் பேராசிரியர்) கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியா மற்றும் நேபாளில் கிறிஸ்தவம் மீது ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர். இவ்வாறு கூறுகிறார்…

“ஆந்திரப் பிரதேசில் கிறிஸ்தவ மக்கள் தொகையின்மீது என் ஆய்வுகள் இரு பகுதிகளாக உளளன. முதலாவது இங்கு மக்கள் தொகைக் கணக்கில் ஒரு குழப்பம் உள்ளதாகத் தெரிகிறது. அதே போல் நேபாளத்தில் கூட உள்ளது. அங்கு கடந்த இரு தசாப்தங்களாக கிறிஸ்தவ மக்கள் தொகை குறைவதாக கணக்குகள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மை நிலவரம் அதற்கு மாறாக உள்ளது. அதுவே உண்மையானால் சரச்சுகளின் எண்ணிக்கை இத்தனை வளரக் கூடாது அல்லவா?
மதம் மாறியவர்களுக்கு கிறிஸ்தவர்களாக தாம் மாறிய உண்மையினை மறைக்கும்படி சர்ச் அதிகாரிகள் கட்டாயம் கூறியுள்ளார்கள் என்பதை என் ஆய்வில் கண்டறிந்தேன். மேலுக்கு ஹிந்து பெயரில் இருந்து வரும் கிறிஸ்தவர்கள் தம் ரிசர்வேஷன்களை ரத்து செய்து விடுவார்கள் என்று பயந்து அவ்வாறு செய்திருக்கலாம். பணத்தைக் காட்டி பேராசை ஏற்படுத்தி மத மாற்றம் செய்வது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆந்திர முதலமைச்சர் ஜகன் தன் தந்தையை விட கிறிஸ்தவ இவாஞ்ஜலிஸ்டாக தயாராகியுள்ளார். பல கிராமங்களில் ஹிந்து கோவில்களை விட அதிக எண்ணிக்கையில் சர்சுகள் பிரம்மாண்டமாக கட்டப்பட்டன. இதுவும் ஈசானிய வடகிழக்கு மாநிலங்களைப் போல் மாறப் போகிறதா?” என்ற அச்சத்தை வெளியிட்டார் டாக்டர கௌதம் சென்.

“கர்நாடகாவிலும் கிறிஸ்தவம் பரவி வருகிறது. திரைப்படத் துறைப் பிரமுகர்கள் பலர் மதம் மாறிய லிஸ்டில் சேர்ந்துள்ளனர். தெலுங்கு மாநிலங்களில் கிறிஸ்தவ பரவல் புதியது ஒன்றுமில்லை. 1971ல் குண்டூரு மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் தொகை அதற்கு முன்பிருந்ததை விட இரு மடங்கானது. (7.3 லிருந்து 14.8). 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவ தொகை குறைவது, ஹெட்யூல் குலங்களில் மக்கள் தொகை அதற்கு ஏற்ப அதிகரிப்பது… இவற்றை ஒரு அரசியல் நகர்வாகப் பார்க்க வேண்டும்” என்கிறார் டாக்டர் கௌதம் சென்.

பேராசையால் ஏமாந்து போய் மதம் மாறியவர்களை சம்மதிக்கச் செய்து மீண்டும் சொந்த மதத்திற்கு அழைத்து வருவது, மதமாற்றம் மீது மசோதா எடுத்து வருவது, ஹிந்துக்களின் மக்கள் தொகையை அதிகரிப்பது (ஒரே குழந்தை என்றில்லாமல்) குறித்து தகுந்த ஆலோசனைகள் செய்வது போன்றவற்றால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.. இல்லாவிட்டால் வரும் நாட்களில் ஹிந்துக்களுக்கு கஷ்டகாலமே என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்! இந்த எச்சரிக்கை மணியோசையைக் காதில் வாங்காவிட்டால் ஆபத்தே! சுவர்கம் சங்கதி என்னவோ தெரியாது…! ஆனால் நரகத்தில் விழாமல் காப்பாற்றிக் கொள்வோமாக!


முன்னூறு ஆண்டுகளுக்கு முன்…!

1717 அக்டோபர் 2 அன்று டேனிஷ் மிஷினரிகள் மதராஸ் மாநிலத்தில் இருக்கும் ஹிந்துக்களிடமிருந்து ஹிந்து மதம் பற்றியும் அவர்களுடைய பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் பற்றியும் பலவித சமாசாரங்களை சேகரிக்கும் முயற்சி செய்தார்கள். கோரமண்டல் அதாவது ஒரு கால சோழமண்டலம் பிரதேசத்தில் இருந்த டேனிஷ் மிஷினரிகளுக்கு ஹிந்துக்களைப் பற்றிய வினாக்களோடு கூடிய கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவற்றுக்கு அங்கிருந்த ஹிந்துக்கள் கூறிய பதில்களை எழுதி அந்த மிஷினரி மீண்டும் தம் தேசத்திற்கு அனுப்புவார்கள். அதன்படி எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் உள்ள கேள்வி பதிலை கவனிப்போம்…

கேள்வி:- கிறிஸ்தவ மதம் பற்றிய கேள்விகளுக்கு மலபாரில் எப்படிப்பட்ட அபிப்பிராயம் உள்ளது?

ஹிந்துவின் பதில்:- எங்களுக்கு கிறிஸ்தவர்கள் என்றால் பிடிக்காது. ஏனென்றால் அவர்கள் பசுக்களை கொன்று தின்பார்கள்.

*பசுக்களைக் கொல்வது ஹிந்துக்களின் பார்வையில் மனிதனைக் கொல்வதற்குச் சமம். ஹிந்துக்களுக்கு பசு மட்டுமல்ல பிற விலங்குகள் மேலும் அன்பு உள்ளது. அதனால் விலங்குகளைக் கொல்வதை அங்கீகரிக்கமாட்டார்கள். மூன்று மாதம் முன்பு ஒரு மனிதன் பசுவைக் கொன்றதால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனையைக் குறைத்து அவனுடைய வலது கையும் இடது காலும் வெட்டப்பட்டன. அவ்வாறு பசுவைக் கொன்ற மனிதனை தொடக் கூடாதென்றும் அப்படிப்பட்ட மனிதனோடு பேசக் கூடாதென்றும் அவர்கள் சட்டம் கூறுகிறது.

*இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொண்ட பின் கிறிஸ்தவர்கள் தம்மைத் தாம் சுத்தம் செய்து கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு எந்தக் கையை எதற்கு பயன்படுத்துவது என்று தெரியாது. வலது இடது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வேலைகளுக்கும் இரு கைகளையும் உபயோகிப்பார்கள். (ஹிந்துக்களின் வழக்கப்படி இடது கையை சுத்தம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அதனால் அந்த கையால் அவர்கள் உணவைத் தொட மாட்டர்கள். யுரோப்பியர்கள் அந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைப் பார்த்து யூரோப்பியர்கள் அசுத்தமானவர்கள் என்ற அபிப்பிராயத்தில் ஹிந்துக்கள் உள்ளார்கள்.)

*மூன்றாவது காரணம்:- கிறிஸ்தவர்கள் மயக்கம் ஏற்படுத்தும் மதுவை அருந்துவார்கள். (மது அருந்துவது ஹிந்துக்களுக்கு குற்றம். ஹிந்துக்களில் சில வர்க்கத்தினர் மட்டுமே மது அருந்துவார்கள் அதனால் ஒவ்வொரு நாளும் மது அருந்தும் யூரோப்பியர்கள் என்றால் ஹிந்துக்களுக்கு அருவருப்பு.)

*இறுதியாக:- கிறிஸ்தவர்கள் இறக்கும் தம் உறவினர், நண்பர் பற்றி பெரிதாக கண்டுகொள்ள மாட்டர்கள். அவ்வாறு கண்டுகொள்ளாமல் போவதால் அவர்களின் ஆத்மாக்கள் சுவர்கத்திற்குச் செல்லாது. (ஹிந்துக்களில் யாருக்காவது மரணம் நெருங்கினால் தானம் செய்வார்கள். அவ்வாறு செய்வதால் மரணித்தபின் மரணித்தவருக்கு உத்தமகதி கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.)

மேலே கூறிய பதில்களை கவனித்தால் பாரதியர்களை விட யூரோப்பியர்கள் மிக அசுத்தமாக இருந்தார்கள் என்பது புரிகிறது. பாரத தேசத்தை பரிபாலித்தோம் என்றும் பாரதியர்களை சுத்திகரித்தோம் என்றும் டமாரம் அடித்துக் கொள்ளும் பிரிடிஷார் கூட அத்தனை தூய்மையாக இருக்கவில்லை. பிரிடிஷ் நகரங்களில் மனிதக் கழிவுகளை எடுத்துச் செல்லும் அமைப்பே இருக்கவில்லை.

1858 ல் தேம்ஸ் நதி நிரம்ப மனிதக் கழிவுகள் சேர்ந்து லண்டன் நகரம் கடுமையான நாற்றத்தால் அசிங்கமாக இருந்தது. மீதி யூரோப்பில் கிறிஸ்தவர்களின் நிலைமையும் அதுவே. அப்போது தம் மல மூத்திரங்களை வீதிகளின் நடுவில் குவிப்பார்கள். ஆனால் பாரதியர்களுக்கு ‘சௌசம்’ (தூய்மை) விஷயத்தில் பல வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. சரக சம்ஹிதை சூத்திரங்களிலும் மனு ஸ்மிருதி போன்ற நூல்களிலும் பலவித செயல்கள் கூறப்பட்டுள்ளன.

இதன் மீது சஹானா சிங் ஆய்வோடு கூடிய கட்டுரை “இந்தியா ஃபாக்ட்ஸ்” என்ற வெப் சைட்டில் கிடைக்கிறது. இதில் பண்டைய காலத்தில் பாரதியர்கள் தம் வீடுகளில் இருந்து கழிவுகளை நீக்குவதற்கு ஏற்பாடு செய்து கொண்ட பலவித வழிமுறைகள், அவற்றுக்குத் தொடர்புடைய ஆதாரங்களோடு கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்தவம் இந்தியர்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டது. அதில் சுத்தம் (சௌசம்) என்பதும் ஒன்று என்று கூறுவதில் சற்றும் சந்தேகம் இல்லை.

இன்றும் மேற்கத்திய பார்வையில் சுத்தம் என்றால் வெளி உடலுக்குத் தொடர்பானதே. பாரதியர்களுக்கு ‘சௌசம்’ என்றால் வெளி உடல் மற்றும் அந்தரங்கம். (பாஹ்யம், அப்யந்தரம் அந்த:). மேலை நாட்டவர்களின் அசுத்தகுணம் குறித்து பாரதியர்களின் அபிப்ராயம் மேலே கூறிய கடிதத்தில் தெளிவாக வெளிப்படுகிறது.

In a more local–centric report, in the Bradford Observer on Thursday 15 July, 1858, THE LONDON SEMELLS, concludes that this event will only harm the people of Brandford:

THE Londond semlls threaten to spread a peculiar kind of pestilence over the whole country- a pestilence that walks it the wind’s eye as well as rides upon its wings, and so subtle and penetrating that no pocket is beyond its reach. It is not cholera or typhus only with which the Thames threatens us provincials; in addition to these evils, or in order to avoid them, it threatens us with taxation. We must pay for the purification of the old river, if we would not have it come down upon us like a flood; we must pay half- and- half forth sewerage of London, under tha penalty of a pestilence.

(நன்றி- ருஷிபீடம் ஆகஸ்ட், 2020)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe