spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்... உண்மைகள்! (பகுதி-34)

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்… உண்மைகள்! (பகுதி-34)

- Advertisement -

தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“படைப்பு கிமு 4004ம் ஆண்டில் தொடங்கியது” – இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பொய்!.

அதனால் பல்லாயிரம் ஆண்டுகள் முன் உள்ள பாரதிய வராலாற்றை ஏற்பதற்கு அவர்களுக்கு மனம் ஒப்பவில்லை

பைபிள் குறிப்பிடும் காலக் கணக்குப்படி கிமு 23-10-4004 ம் ஆண்டில் காலை ஒன்பது மணிக்கு படைப்புத் தொடங்கியது என்று 1664 ல் அயர்லாந்தில் ஆர்ச்பிஷப் ஜோன்அஷர் அறிவித்தார்.

அதனால் பல்லாயிரம் ஆண்டுகள் முன் உள்ள பாரதிய வராலாற்றை ஏற்பதற்கு அவர்களுக்கு மனம் ஒப்பவில்லை. அவர்களின் படைப்புக்கு (?) முன்பே உள்ள வேதங்கள், ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், உபநிஷத்துகளை என்ன செய்வது? இவற்றை எவ்வாறு படித்தறிவது? என்பது அவர்களுக்கு பெரிய பிரச்னையானது. 17, 18ம் நூற்றாண்டுகளில் ஜெர்மன், ஆங்கில மொழிகளுக்கு தம் மேலோட்டமான சிற்றறிவோடும் வயிறுநிறைய பொறாமையோடும் அசூயையோடும் இந்த இலக்கிய பகுதிகளின் மொழிபெயர்ப்பைத் தொடங்கினர்.

நம் இதிகாசங்களை அர்த்தம் செய்து கொள்வதிலும் அவற்றின் காலக் கணக்கீட்டிலும் குழப்பம் ஏற்படுத்தும் மொழிபெயர்ப்பை ஆங்கிலேயர் செய்தனர். ராமாயணமும் மகாபாரதமும் வரலாற்று நூல்கள் அல்லவென்றும் கற்பனைக் கதைகள் என்றும் கிறிஸ்தவ வராலாற்று ஆசிரியர்கள் கூறுகையில், மேலும் சில ஆங்கிலேய வரலாற்றாய்வாளர்கள் அவற்றின் காலம் குறித்த குழப்பத்தை ஏற்படுத்துவதில் வல்லவராக இருந்தார்கள். மகாபாரதம் முன்பு எழுதப்பட்டதென்றும் அதன் பின்னரே ராமாயணம் எழுதப்பட்டதென்றும் ஒரு முன்மொழிவைப் பரப்பினர்.

மகாபாரத வாரலாற்றை ஹிந்து மஹாயுகம், முஸ்லிம் யுகம், பிரிட்டன் மகா யுகம் என்று பிரித்தார்கள். இதில் ஹிந்து இலக்கியத்தில் குறிப்பிட்டபடி புராதன தன்மைக்கு இடமே இல்லை என்று அடித்துக் கூற முன்வந்தார்கள். ஏனென்றால் அவர்களின் பைபிள்படி அப்போது படைப்பே தொடங்கவில்லை அல்லவா? ராமாயணமும் மகாபாரதமும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதப்பட்டவை என்று கூறி மக்களை மதி மயங்கச் செய்தார்கள்.

ஆங்கிலேயக் கல்வியின் தாக்கத்தில் இருந்த இந்தியர்கள் (மெக்காலேவின் மானசிக புதல்வர்கள்) இந்த விஷயங்களை நம்பினர். இந்திய மாணவர்கள் புராணங்களை வரலாறாக ஏற்பதா வேண்டாமா என்ற ஐயத்தில் விழுந்தார்கள். பூசாரி ஆட்டுக் குட்டி கதை போல ஆயிற்று அவர்களின் நிலைமை.

இந்த பிரமைகளை நீக்குவதற்கு நம் வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வுகளை விரைவுப்படுத்த வேண்டும். மகாபாரதக் கதை நடந்த இடங்கள், வனங்கள், நகரங்கள், கிராமங்கள் பலவும் இப்போதும் அதே பெயர்களோடு அழைக்கப்பட்டு வரலாற்றுச் சான்றுகளாக நிற்கின்றன.

அந்த இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடக்கவில்லை. நடப்பதும் இல்லை. அரசாங்கம், பல்கலைகழகங்கள், தொல்லியல் துறையினர் இந்த விஷயத்தில் பரிசோதனைகள் நிகழ்த்த வேண்டியது அவசியம்.

பல்வேறு புராணங்களில் உள்ள அம்சங்களை ஆதாரமாகக் கொண்டு அரச வம்சங்களின் வரலாற்றை ஆய்வு செய்து திரு. கோட்ட வெங்கடாசலம் எழுதிய Chronology of Ancient Hindu History என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றின் பக்கங்களைப் புரட்ட வேண்டும்.

அப்போதைய கல்வெட்டுக்கள், செப்பேடுகளின் மேல் உள்ள தான பத்திரங்களை ஆதாரமாகக் கொண்டு கால நிர்ணயம் நடக்க வேண்டும். அன்றைய பூகோள வர்ணனைகள் மகாபாரதம் ஒரு வரலாற்று நூல் என்று கூறாமலே கூறுகின்றன.

தர்மராஜனின் பேரனான ஜனமேஜயன் கலியுகம் 89ம் ஆண்டு பிலவங்க நாம வருடத்தில் (கிமு 3013-12) ஒரு ஆன்மீக மடத்திற்கு இரண்டு கிராமங்களை தானம் செய்த சாசனம் கிடைத்துள்ளது. அதோடு ஜனமேஜயன் கேதார்நாத் கோவிலுக்கு அளித்த தானபத்திரத்தின் விவரங்கள் செப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடற்கரையில் கிடைத்த துவாரகா சிதிலங்கள் கூட துவாரகா ஒரு ‘மித்யை’ என்று வர்ணித்த போலி வரலாற்று ஆய்வாளர்களின் வாய்க்கு பூட்டு போடும்படிச் செய்தன.

வந்தேறிகளான போலி மேதாவிகள் எழுதிய போலி வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்!


  • Source: ருஷிபீடம், ஜூலை, 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe