December 6, 2024, 10:10 AM
27.2 C
Chennai

அண்ணாமலை பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு சில தீர்வுகள் இதோ…!

கட்டுரை: முனைவர் பி. சுபாஷ் சந்திரபோஸ் 

தமிழக உயர்கல்வி வரலாற்றில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆற்றிய பணி மகத்தானது. தமிழ்நாட்டில் இயங்கிய தனியார் பல்கலைக்கழகம். அண்ணாமலை அரசர் தன் சொந்தப் பணத்தில் 1929 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தை உருவாக்கி உயர்கல்வி வளர்த்த பெரும்வள்ளல்.

இப் பல்கலைக்கழகம் 1500 ஏக்கர் பரப்பளவில் கலை, அறிவியல், பொறியியல், கல்வியியல், மொழியியல், உடற்கல்வியியல், வேளாண்மையியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி நிலைகளில் இயங்கும் ஒரே பல்கலைக்கழகம். 1979 ஆம் ஆண்டு அஞ்சல் வழிக்கல்வியைத் தொடங்கி உலக அளவில் மிகவும் சிறப்பாக நடத்தியது இப்பல்கலைக்கழகம்.

நான் 1981ஆம் ஆண்டு முனைவர் அகத்தியலிங்கம் தலைமையில் இயங்கிய மொழியியல் துறையில் கோடைக் கால வகுப்பில் மொழியியல் படித்து சான்றிதழ் பெற்றேன். இங்குதான் முதுகலைத்தமிழ் பாடம் கற்பித்த என் 

பேராசியர் இரா. சாரங்கபாணியும் படித்துள்ளார். நான் கோடை வகுப்பில் மொழியியல் படித்த காலத்தில் பல்கலைக்கழகத்தையும் வரலாற்றையும் படித்து வியந்து மகிழ்ந்தேன்.

இங்கு சாகித்திய அகாதெமி நடத்திய “இந்திய இலக்கியத்தில் விடுதலை நோக்கு” என்னும் தலைப்பில் சாஸ்திரி அரங்கில் நடந்த தேசீய கருத்தரங்கில் ஒப்பியல் அறிஞர் முனைவர் கா. செல்லப்பன் அவர்கள் முன்னிலையில் ஆங்கிலத்தில் தலைமையுரை ஆற்றினேன்.பேராசிரியர் ஆறு. அழகப்பன் மொழிப்புலத்தின் முதன்மையராகப் பதவி வகித்த காலத்தில் நடத்திய இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் கருத்தரங்க அமர்வில் ஆய்வுக்கட்டுரை படித்தேன். இம்மன்றத்தின் நிகழ்வுகளை நல்விருந்தளித்து சிறப்பாக நடத்திய பெருமைக்கு உரியவர் பேராசிரியர் ஆறு. அழகப்பன்.

பேராசிரியர் கா. செல்லப்பனும் பேராசிரியர் ஆறு. அழகப்பனும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். அதிலும் முனைவர் ஆறு. அழகப்பன் படித்த இடத்தில் பணியாற்றி அண்ணாமலையில் ஆட்சி செய்தவர்.என் இனிய நண்பர் பத்மஶ்ரீ சிற்பி பாலசுப்பிரமணியன் அண்ணாமலையின் முன்னாள் மாணவர்.

தற்போது தமிழக அமைச்சரவையில் உயர்கல்வி அமைச்சர்  பல்கலைக்கழக இணைவேந்தர் முனைவர் க. பொன்முடி இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். இதுபோல் முன்னாள் கல்வி அமைச்சராக விளங்கிய நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன் ஆகிய இருவரும் இப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் என்பது பல்கலைக்கழகத்தின் பெருமைக்குச் சான்று.

ALSO READ:  உலக அரங்கில் அமைதியை விதைக்கும் பாரதம்!

இப்பல்கலைக்கழகம் பேராசிரியர் நியமனத்திலும் அஞ்சல் வழிக்கல்வி இயக்கத்திலும் பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்தின் விதிமுறையை மீறி செயல்பட்ட காலத்தில் பேராசிரியர் ஆறு. அழகப்பன் உள்ளிட்ட பலரும் முறையிட்ட போது நிர்வாகம் கேட்க மறுத்து விட்டது. அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பல நெருக்கடிகளும் உயர்கல்வியில் சரிவும் ஏற்பட்ட காலத்தில் 2013 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து மாநில அரசின் பல்கலைக்கழகமாக மாற்றியது பெருஞ்சாதனை.

இப்பல்கலைக்கழகத்தில் இளநிலைப் படிப்புகள் எல்லாத் துறையிலும் 5000 மாணவர்கள் படித்துப் பயன் அடைந்தனர். ஆனால் நிர்வாகம் மாணவர் போராட்டத்தைக் காரணம் காட்டி, பேராசிரியர் சிட்டிபாபு துணைவேந்தராக இருந்த காலத்தில், இளநிலை படிப்புகளை நிறுத்தி வருவாய் இழப்புக்கு ஈடுசெய்ய பேராசிரியர் நியமனங்களைச் செய்து சிக்கலை மேலும் சிக்கலாக்கி விட்டனர்.

இப்போது எல்லாப் பல்கலைக்கழத்திலும் நிதி நெருக்கடி அதிகரித்திருப்பதை, தமிழக அரசு கவனத்தில் எடுத்துத் தீர்வு காண வேண்டும்.

தமிழக அரசு 2021ஆம் ஆண்டு வல்லுநர் குழுவின் கருத்துரு அடிப்படையில் கடலூர்,கள்ளக்குறிச்சி,மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இயங்கும் கல்லூரிகளுக்கு இணைவு வழங்கும்( Affiliation ) பல்கலைக்கழகமாக மாற்றியதைப் பாராட்ட வேண்டும்.

இப்போது தமிழக அரசு கூடுதலாக இருக்கும் ஆசிரியர்களை அரசுக் கல்லூரிக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். காரணம் அரசுக் கல்லூரிகளில் ஏற்கெனவே 5000க்கும் மேற்பட்ட கெளரவ ஆசிரியர்கள் 15000 ரூபாய் சம்பளம் வங்கிச் சிரமப்படுகின்றனர். அரசுக் கல்லூரியில் 2015ஆம் ஆண்டு முதல் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இரண்டு ஷிப்ட் வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்தச் சிக்கலுக்கு என்னதான் தீர்வு? 

1. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உடனடியாக அரசு எல்லாத் துறையிலும் இளநிலை பட்டப்படிப்பு வகுப்புக்களைத் தொடங்க வேண்டும். அத்துடன் கணினி அறிவியல், உயிரி நுட்ப இயல், சட்டத்துறை போன்ற புதிய படிப்புகளையும் தொடங்கி காலையிலும் மாலையிலும் இரண்டு ஷிப்ட் நடத்த வேண்டும். இப்பாடங்களை நடத்த உபரி ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தி வருவாயைப் பெருக்கலாம்.

ALSO READ:  ராகுல் காந்தி: அமெரிக்காவிலும் அதே அசடு!

2. அஞ்சல்வழிக்கல்வியை  யூஜிசி (UGC) மற்றும் டெப் (Distance Education Bureau) விதிமுறைப்படி ஒழுங்கு செய்து அனுமதி பெற்றுத் தரமான கல்வியை வழங்கத் திட்டமிட்ட வேண்டும்.

3. ஆன்லைன் மூலமும் பட்டம் மற்றும் புதிய பட்டய வகுப்புக்கள் நடத்தலாம்.

4. ஆராய்ச்சித் துறைகளை தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் செய்தும் வருவாயைப் பெருக்கலாம்.

5. மத்திய அரசு வழங்கும் நிதியைப் பெற்று Skill Development Department தொடங்கலாம்.

6. பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்குப் புத்தொளி பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். 

7. ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற உதவி செய்து வருவாய் ஈட்டலாம்.

8. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூலம் குறைந்த செலவில் மருத்துவ வசதியைப் பெருக்கலாம்

9. வேளாண் துறையில் பகுதி நேரப் பட்டய வகுப்புகள் தொடங்கலாம்

10. அரிய நூல்களை எல்லாம் நேர்த்தியாக வெளியிட்ட பதிப்புத்துறையைப் புதுப்பித்து எல்லா நூல்களையும் / புதிய நூல்களை வெளியிட்டு விற்பனைக்குக் கொண்டு வரவேண்டும்.

Note: In my observations, all state universities are facing problems to conduct the courses.
1. The UGC and DEB are directed to conduct the distance mode only in the higher education centre.
2. All courses in the distance mode  must match with university’s regular courses
3. DEB is not permitting private centres
4.  The Distance mode courses centre must be in the jurisdiction of the respective university
5.  The higher education department of the Tamilnadu government must arrange a joint meeting with experts and all Vice-chancellors of the Universities.

ALSO READ:  இனி தட்கலில் டிக்கெட் போட வேண்டாம்! ரயில்வே முன்பதிவில் மிகப் பெரிய மாற்றம்!

அண்ணாமலைப் பல்கலைக்கழக  முன்னாள் மாணவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சிலர்…
1. ஆளுநர் பி. சி அலெஸ்சாண்டர்
2. உச்ச நீதிமன்ற நீதியரசர் வி. ஆர் கிருஷ்ணய்யர்
3. பத்மபூஷன்  வான்வெளி விஞ்ஞானி எஸ். சீனிவாசன்
4. எழுத்தாளர்கள்க. நா. சுப்ரமமனியன், நகுலன்
5. சி பி ஐ இயக்குநர் டி. ஆர் கார்த்திகேயேன்
6.திரைப்பட இயக்குநர் பாலச்சந்தர், டிஆர் இராசேந்திரன்
7. தமிழ்ச்செம்மல் – துணைவேந்தர் வ. சுப மாணிக்கம்
8. அரசியல் தலைவர்கள் கே. ஏ மதியழகன், எஸ். டி சோமசுந்தரம், பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன், பழ. நெடுமாறன், கி. வீரமணி … என இன்னும் பலர் உண்டு.


p-subhash-Chandrabose
P Subhash Chandrabose

Dr. P.Subas Chandra Bose
Former Prof and Head- PG & Research Department of Tamil, Bishop Heber College
Former Senate member, and Former Controller of Examinations, Bharathidasan University
Former Member Secretary , State Level Eligibility Test( UGC & BARD) / Teachers Recruitment Board( BARD & Govt. Of Tamilnadu
Tamil expert in UGC panel member 1998 onwards
Former Project fellow in UGC, 2007
Former Senior Fellow in Culture Dept. GOI 2010
Former Project Fellow in  Institute of Classical Tamil, 2011
Former Syndicate Member and Former Governing Council member in Distance Education. Alagappa  University –
Cell Number:94431 62085 / Mail ID: [email protected]


author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week