
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
பாரதத்தின் பாரம்பரியச் செல்வம் எனக்கு பெருமையளிக்கிறது. “விஞ்ஞான ஆராய்ச்சிகள் முன்னேற்றம் காணும் போது ஹிந்து மதத்தின் உயர்வு வெளிப்படும்” என்று சுவாமி விவேகானந்தர் 19 வது நூற்றாண்டின் இறுதியில் கூறினார். அந்த தீர்க்கதரிசியின் சொற்கள் சத்தியம் என்று நிரூபணமாகிக் கொண்டே வருகிறது. நம் மதத்தை காட்டுமிராண்டி வாழ்க்கை முறை என்றும் இயற்கையை பார்த்து பயப்படும் காட்டுவாசிகளின் குரலே வேதங்கள் என்றும் இந்து மதம் மூட நம்பிக்கைகளின் பிறப்பிடம் என்றும் தம் அபிப்ராயங்களை வெளிப்படுத்தி, மேற்கத்தியர் தம் அரசாட்சியில் அன்றைய பாரதிய மூளையை களங்கப்படுத்தினார்கள். அந்த களங்கமடைந்த இந்தியர்கள் நாட்டையும் அதன் பாரம்பரியத்தையும் ஹிந்து தர்மத்தையும் பழக்க வழக்கங்களையும் நூல்களையும் இகழ்ந்து பேசி மேற்கத்திய கலாச்சாரத்தை வழிபடத் தொடங்கினார்கள். இன்றும் கூட அத்தகையோருக்குக் குறைவில்லை.
ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மேற்கத்திய மேதைகளில் சிலர் அதிலும் விஞ்ஞான மற்றும் தத்துவ சிந்தனை கொண்டவர்கள் ஹிந்து தர்ம நூல்களிலும் பழக்க வழக்கங்களிலும் உள்ள உயர்வைத் தெரிந்து கொண்டு புகழ்ந்து வருகிறார்கள். மாக்ஸ்முல்லர், ஜார்ஜ் பெர்னாட்ஷா, மார்க் ட்வைன், ஜான் உட்ராப் போன்றவர்களில் தொடங்கி குவாண்டம் பிசிக்ஸ் முன்னேற்றமடைந்த இன்றைய விஞ்ஞான யுகம் வரை நம் நூல்களில் உள்ள நித்திய நூதனமான விஞ்ஞானத்தை உணர்ந்து போற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
சமஸ்கிருத மொழியின் சர்வ வல்லமையுள்ள முழுமையான இயல்பைக் கண்டு திகைத்து நிற்கிறார்கள். அதனைக் கற்று பயிற்சி செய்து புதிய விஷயங்களை தரிசித்து வருகிறார்கள்.
விஞ்ஞானம், கலை, தத்துவ ஞானம் இந்த மூன்றும் ஒன்றிணைந்ததே பாரதிய வேத கலாச்சாரம் என்ற அற்புத உண்மை ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது.
ஒரு காலத்தில் அர்த்தமில்லாத கூத்தாக தூக்கி எறியப்பட்ட யோகம், தியானம் போன்றவற்றை இப்போது அனைத்துலக மாணவர்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை என்று தலையில் தாங்கிக் கொண்டாடுகிறார்கள். அதே வரிசையில் ஆயுர்வேத மருத்துவ முறையை முழுமையான அறிவியலாகவும், இப்பொழுது உள்ள நவீன மருத்துவத்தை விட பல ஆயிரம் ஆண்டுகள் அட்வான்ஸ்டு சிகிச்சை முறை என்றும் ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்.
மூடநம்பிக்கைகள் என்று ஏளனம் செய்யப்பட்ட மந்திரங்களும் யந்திரங்களும் அவற்றின் தாக்கமும், அவற்றில் உள்ள சூட்சும அறிவியலும் புகழுக்குப் பாத்திரமாகியுள்ளன. மேல்நாட்டு மேதைகள் பரிசீலித்து ஆராய்ந்