காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஏதோ கூலிப்படையினர் என்று எண்ணி விடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்களைப் பற்றிய சிறிய குறிப்பை தொடர்ந்து கொடுத்து வருகிறேன்.
அவர்கள் இந்த பாரத தேசத்தை நேசித்தவர்கள்’அவர்கள் இதயம் தேசம் தேசம் என்றே துடித்தது… இந்த தேசத்தின் நலனுக்காக தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்தவர்கள்.. இருப்பது ஒரு உயிர் அது போகட்டும் இந்த தேசத்திற்காக என எண்ணிச் செயல்பட்டவர்கள்.. என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்த இடத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் அவர்களின் நினைவு ஏனோ வருகிறது..
தன் காலத்திற்குப் பிறகு வந்த சுதந்திரb போராளிகளுக்கு வழி காட்டியவர் அல்லவா!
‘’ IF YET YOUR BLOOD DOES NOT RAGE THEN IT IS WATER THAT FLOWS IN YOUR VEINS ; FOR WHAT IS THE FLUSH OF YOUTH, IF IT IS NOT OF SERVICE TO THE MOTHERLAND ”
’’ உங்கள் இரத்தம் கொந்தளிக்கவில்லை யென்றால்,உங்கள் இளமையின் வேகம் தாய்நாட்டின் சேவைக்காக பயன்படவில்லையென்றால் உங்கள் நரம்புகளிலே ஓடுவது தண்ணீர்தான் ‘’ என வீர முழக்கமிட்டவர் ஆசாத்.
தாய் திருநாட்டை தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட விரும்பாதோன் வாழ்வும் ஒர் வாழ்வா..? என பொங்கியெழுந்து தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் இந்த தேசத்திலே எண்ணற்றோர்…!
‘ கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது ‘ என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை சுதந்திர போராட்டக் காலத்தில் பாடிச் சென்றார்.
இந்தg கருத்திலே எனக்கு உடன்பாடில்லை.. தேச விடுதலையிலே.. அந்தக் காலத்து புரட்சியாளர்களின் பங்களிப்பு குறிப்பிட்ட அளவிற்கு இருந்திருக்கிறது என நான் நம்புகிறேன்.
‘ நான் சுதந்திரமானவன் சுதந்திரமானவன் ‘ எனும் உள்ள கோஷத்தோடு வலம் வந்தவர்களில் முக்கியமானவர் வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
அந்த சாவர்க்கர், தன் கல்லூரி படிப்பை முடித்த பிறகு கிராமம் கிராமமாகச் சென்று சுதந்திர எழுச்சியுரைகள் நிகழ்த்தினார்,தேசப்பக்தி பாடல்களை கதை வடிவங் களிலே இயற்றி பாடி மக்களிடையே எழுச்சியூட்டினார்.. தேசம் சந்தித்து வரும் பிரச்னைகளை துண்டு பிரசுரங்கள் மூலம் நாட்டு மக்களிடையே கொண்டுச் சென்றார்.
இந்தb பிரசுரங்களை ஆங்கிலேய அரசு பறிமுதல் செய்தது, விநியோகிப்பதோ, வைத்திருப்பதோ குற்றம் என அறிவித்தது.. இப்படியாக,
தன்னுடைய 22ஆவது வயதிலேயே,அன்னிய ஆங்கிலேய ஆட்சியின் துணிச்சலான,சற்றும் பயமற்ற எதிரியாகத் தன்னை பதிவுச் செய்துக் கொண்டார் சாவர்க்கர்…
( தொடரும் )
- எழுத்து: யா.சு.கண்ணன்




