படேல் ஜி இருந்த காங்கிரஸ் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’. அதில் அனைத்துத் தரப்பினரும் இருந்தனர் – இந்துத்துவர்கள் உட்பட.
ஆர்.எஸ்.எஸ். தலைவரான ஹெட்கேவாரும் அதில் இருந்தார். ஹிந்து மஹாசபைத் தலைவர்களும் இருந்தார்கள். பின்னாள் ஜனசங்கத்தினரும் முன்னாள் காங்கிரஸ்க்காரர்களே.
இவர்கள்அனைவரும் படேல் ஜியுடன் கொள்கையிலும் செயலிலும் ஒன்றாகவே உறவு கொண்டவர்கள். எனவே, படேல் ஜி அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானவர். அவரோடு கொள்கையிலும் செயலிலும் ஒன்றுபடாதவர் நேருவும் அவர் ஆதரவாளர்களும் மட்டுமே.
அப்படி இருந்த ககாங்கிரஸ் நேரு கைக்குப் போனபோதே அதை காந்தி ஜி கலைக்கச் சொல்லிவிட்டார். அவர் சொன்னது சரி என நிருபிக்கும் வண்ணம் காங்கிரஸின் பன்மைத்தன்மையை முதன்முறையாக அழிக்க ஆரம்பித்தது நேருவே.
இத்தனை ஆண்டுகளாகக் காங்கிரஸில் இருந்து கொண்டு சுதந்திரத்துக்காகப் போராடிய ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களைக் காங்கிரஸில் சேர்க்கக்கூடாது என விதி செய்தார் நேரு. அதன்பின் அக்கட்சி நேரு கட்சியாக ஆனது.
நேருவின் முட்டாள்த்தனங்களை ஏற்காத இடதுசாரிகளும் அதில் இருந்து விரட்டப்பட்டனர். ப்ரஜா ஸோஷியலிஸ்ட் கட்சி ஆரம்பித்தனர்.
கேப்பிட்டலிஸவாதியான ராஜாஜி வெளியேற்றப்பட்டு ஸ்வதந்த்ரா கட்சியை ஆரம்பித்தார்.
அக்கட்சியில் இருந்த எஞ்சிய காந்தியவாத ஸோஷியலிஸ்ட்களை இந்திரா விரட்டி அடித்தார். லால்பகதூர் ஸாஸ்திரி சோவியத்தால் கொல்லப்பட்டார். சோவியத் ஆளான இந்திரா பதவிக்கு வந்தார். காமராஜரை விரட்டினார். கட்சி உடைந்தது.
பின்னர் வந்தது இந்திரா காங்கிரஸ் என்றே அறியப்பட்டது.
இந்திராவும், அவர் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டு, கத்தோலிக்கக் காங்கிரஸாக ஆகி உள்ளது தற்போதைய சோனியா காங்கிரஸ்.
இதற்கும் படேல் ஜிக்கும் ஸ்நானப் ப்ராப்திகூட இல்லை.
ஆனால், படேல் ஜிக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் உள்ள பிணைப்பு அப்படியே தொடர்கிறது.
பழைய காங்கிரஸின் நீட்சியே படேல் ஜியைக் கொண்டாடும் பாஜக. இப்போதைய காங்கிரஸைவிட அதிக உரிமைகள் பாஜகவுக்கு மட்டுமே இருக்கின்றன.
தற்போதைய காங்கிரஸின் உரிமை பெயரளவில் மட்டுமே. தற்போதைய பாஜகவின் உரிமை உயிரளவில், உறவில்.
அதனால்தான் அக்கட்சியில் கார்ப்பரேட்டிஸ்டுகளும், இடதுசாரிகளும், அம்பேத்காரியவாதிகளும், முகமதியர்களும், கிறுத்துவர்களும் இருக்கிறார்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள். அக்கட்சியில் ஒரு சில இந்துத்துவவாதிகள்கூட உண்டு…




