December 5, 2025, 10:05 PM
26.6 C
Chennai

கங்கைக்கரையில் வள்ளுவர் சிலை: மாற்றம் பெற்ற மர்மம்!

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின் (குறள் 937)

கழகத்தில் ஒருவன் காலடி எடுத்து வைத்தால் அவனின் அனைத்து வகை செல்வங்களும், நற்குணங்களும் கெடும் என்கிறது குறள். இந்தக் குறளில் கழகம் என்பதற்கு சூதாடும் இடம் என்று பொருள். இந்தப் பொருள், திராவிட இயக்கக் கழகங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

சமீபத்தில் இந்தக் கழகக் களத்தில் சில தேசிய இயக்கத்தினர் காலடி எடுத்து வைத்துள்ளனர். ஹரித்வாரில், கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ, இந்தக் கழகத்தினரை அழைத்துக் கொண்டு கிளம்பப் போகிறார் பா.ஜ.க வின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.தருண் விஜய் அவர்கள்.

கங்கைக்கரையில் வள்ளுவர் – தமிழாகரர்.சாமி.தியாகராசன் அவர்களின் கருத்துரு
பா.ஜ.க வின் பாரளுமன்ற உறுப்பினர் திரு.தருண் விஜய் அவர்கள், திருக்குறள் யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரைக்கு திருச்சிராப்பள்ளியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்புக் கூட்டத்தின் தலைவரும், திருவள்ளுவர் திருநாட்கழகத்தின் தலைவருமாகிய தமிழாகரர்.பேராசிரியர்.சாமி.தியாகராசன் அவர்கள் ”கங்கைக்கரையில் வள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும், அதற்கான ஏற்பாட்டைத் திருவள்ளுவர் திருநாட்கழகம் செய்து தரும், தங்களால் முடியுமா?” என்று கேட்க, ”நீங்கள் சிலையைத் தந்தால் அதை நான் ஹரித்வாரில் வைக்கிறேன்” என்றார் திரு.தருண் விஜய் அவர்கள். சிலையைச் செய்து தருகிறேன் என்று அங்கேயே ஒப்புக் கொண்டார் திருவள்ளுவர் திருநாட்கழகத்தின் தலைவர் திரு.சாமி.தியாகராசன் அவர்கள்.

திருவள்ளுவர் திருநாட்கழகம்
வள்ளுவருக்கென்று ஒரு நாள், அதுவே திருநாள், அந்நாள் வைகாசி அனுஷம் என்று அனைத்துத் தமிழறிஞர்களும், 1935 ஆம் ஆண்டு, தொன்று தொட்டு ஆலயங்களில் கொண்டாடப்பட்டு வரும் திருவள்ளுவர் அவதார தினத்தை ஏற்று, அந்நாளை உலகம் முழுவதும் கொண்டாட ஏற்படுத்தப்பட்ட அமைப்பே திருவள்ளுவர் திருநாட் கழகம். காலப் போக்கில் இந்த அமைப்பு நலிவுற்றுப் போனது. இந்த உயரிய பாரம்பரியமும் நோக்கமும் கொண்ட அமைப்பை உயிரூட்டி, செவ்வனே செயல்பட வைத்தார் தமிழாகரர்.பேராசிரியர்.சாமி.தியாகராசன் அவர்கள்.

திருவள்ளுவர் சிலை

thiruvalluvar1
கங்கைக்கரையில் அமைக்கப்பட வேண்டிய சிலை எப்படி இருக்கவேண்டும்? எதனால் செய்யப்பட வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது. ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர் மயிலை திருவள்ளுவர் கோவிலில் வழிபாடு நடத்தும் சிலையின் முக அமைப்பை ஒத்திருக்கும் மயிலாப்பூர் சம்ஸ்க்ருதக் கல்லூரி அருகில் இருக்கும் சிலையை மாதிரியாகக் கொண்டு 4 1/2 அடி உயரச் கற்சிலையைச் செய்தனர்.

மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் சிலை பல வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டது. இந்தச் சிலையின் அமைப்பையே அந்நாள் முதல்வர் திரு.பக்தவத்சலம் அவர்கள் அரசின் அதிகாரப்பூர்வமான உருவமாக அறிவித்தார். இந்தச் சிலையை அந்நாள் ஜனாதிபதி திரு.சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்தச் சிலை திறக்கப்பட்ட நாள் வைகாசி அனுஷம்.

ஏன் வைகாசி அனுஷம்?
இந்தச் சிலை திறக்கப்பட்ட வைகாசி அனுஷ நாளை திரு.பக்தவத்சலம் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்தது. இந்த அறிவிப்பை அப்போதைய தி.மு.க தலைவராக இருந்த அண்ணாத்துரை உட்பட அனைவரும் வரவேற்றனர். இந்நிலையில் 1972.ஆம் ஆண்டு முதல்வர் பொறுப்பிலிருந்த கருணாநிதி தை மாதம் 2 ஆம் நாள் வள்ளுவர் தினம் என்று அறிவித்து, பாரம்பரியமான திருவள்ளுவர் திருநாளுக்கு முடிவுரை எழுதினார். இந்த கருணாநிதியின் வரலாற்றுப் பிழையை இன்று வரை அ.தி.மு.க அரசு திருத்த முயற்சிக்கவில்லை. அதற்காகத் திருவள்ளுவர் திருநாட் கழகம் பலமுயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

சிலை ஒப்படைப்பு:

thiruvalluavar4thiruvalluvar6

Thiruvalluvar Thirunaal Kazhagam 6

Thiruvalluvar Thirunaal Kazhagam 8
திருவள்ளுவர் திருநாட் கழகத்தினரால் செய்யப்பட்ட சிலை 27.08.2015 அன்று சென்னை தியாகராய நகரிலுள்ள வாணி மகாலில் கங்கைக் கரையில் நிறுவப்படுவதற்காக திரு.தருண் விஜயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கோலாகலமான நிகழ்சியில் திருப்பனந்தாள் இணை அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் சாமிகள் அவர்கள், நீதியரசர் இராமசுப்பிரமணியன் அவர்கள், மத்திய அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள், முனைவர் பர்வீன் சுல்தானா மற்றும் பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சிலையைப் பெற்றுக்கொண்டு கங்கைக்கரையில் அதை நிறுவப் போவதாக உரையாற்றினார் திரு.தருண் விஜய் அவர்கள். இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

சிலை மாற்றம்

tiruvalluvar new statue

இந்த நிகழ்ச்சிக்குப் பின் பலமுறை திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர் திரு.தருண் விஜையை தொடர்பு கொண்டனர் ஆனால் எந்த பதிலும் இது நாள் வரை இல்லை. இந்நிலையில் 11.06.2016 அன்று திரு.தருண் விஜய் அவர்கள் ஹரித்வாரில் நிறுவ திருவள்ளுவர் சிலையை தமிழகத்திலிருந்து எடுத்துச் செல்ல இருப்பதாகவும், அது நாமக்கல்லில் செதுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் சிலை கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையைப் போல நிற்கும் திருக்கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கையில் ஓலைச்சுவடி ஏந்தி, எழுத்தாணியால் எழுதும் வள்ளுவர்! நின்று கொண்டே எழுத்தாணியால் எழுதுவது எப்படி சாத்தியமாகும் என்ற அடிப்படை கூடத் தெரியாத ஒரு கற்பனை வடிவம்!

இந்த அசாதாரணச் சிலை மாற்றம், சில கேள்விகளை எழுப்பியுள்ளது

  • ஒரு பொது நிகழ்ச்சியில், பலர் முன்னிலையில்,மாண்புடைய பெரியவர்களிடமிருந்து கங்கைக் கரையில் வைப்பேன் என்று சொல்லி சிலையை வாங்கிவிட்டு, அதை கண்டுகொள்ளாமல் வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம் வள்ளுவமாகுமா?
  • இந்தச் சிலை மாற்றம், வள்ளுவர் சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புடைய தமிழ் மக்களை அவமதிப்பதாகாதா?
  • இறை உருவமாக, தமிழ் சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வள்ளுவர் திருவுருவச் சிலைக்கு பதிலாக, வளைந்து நெளிந்த ஆட்டக்காரியைப் போல், அரசியலுக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் உருவாக்கப்பட்ட பாழ் நெற்றிச் சிலையை தருண் விஜய் அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமென்ன?

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் (குறள் 282)

என்ற குறளைத் திருக்குறள் தூதர் தருண் விஜய் அவர்கள் படித்திருந்தால், தமிழாகரர்.சாமி.தியாகராசன் அவர்களின் கருத்தைத் திருடி, அதைத் தன் கருத்தாகச் சொல்லி விளம்பரம் தேடிக் கொண்டிருக்க மாட்டார். இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது!

திராவிட மாயை
திரு.தருண் விஜய் சார்ந்திருக்கும் கட்சியும், அதன் குடும்ப அமைப்புக்களும் வள்ளுவத்தின்படி நடந்து வரும் அமைப்புக்கள். இந்த அமைப்புக்களில் இருக்கும் சிலருக்கு தமிழகத்தில் தேசிய, தெய்வீக அமைப்புக்கள் தனிமைப்பட்டிருப்பதாகவும், அவை வளராமல் இருப்பதற்கு திராவிட அரசியலுடன் இந்த இயக்கங்கள் நெருங்கி செல்லாமல் இருப்பதே காரணம் என்றும், திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ.இராமசாமி நாயக்கரை சமுதாயப் புரட்சியாளர் என்று ஏற்றுக் கொள்ளாமல் போனதே காரணம் என்ற தவறான கருத்து உள்ளது.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் (குறள் 620)

மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர்,விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர் என்ற குறளின் மீது உள்ள நம்பிக்கை குறைபாட்டினால் இவர்கள் இந்த திராவிட மாயையில் சிக்கித் தவிக்கிறார்கள். திராவிட மாயையை விதியாக எண்ணி, அதை விலக்க முடியாது என்ற முடிவுக்கும் வந்துவிட்டனர். இந்த திராவிட மாயையில் சிக்கித் தவிப்பவர்கள், திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களின் பாராட்டுதலுக்கும், சான்றிதழ்களுக்கும் ஏங்கத் தொடங்கிவிட்டனர். இந்த ஏக்கத்தின் விளைவாக திராவிட இயக்கத்தினருடன் நட்பு வைக்கத் துடிக்கின்றனர். இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதைத் திருவள்ளுவர்

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு (குறள் 821)

என்று குறிப்பிடுகிறார். அதாவது மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கும் பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும் என்கிறது குறள். நம் திருக்குறள் தூதர் தருண் விஜய் அவர்களின் நண்பர்கள் யார்? அவர்கள் சார்ந்த கொள்கை என்ன? வள்ளுவத்திற்கும் அவர் நண்பர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கடவுள் மறுப்பு வள்ளுவமா?
திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் இடம் பெறும் முதல் மூன்று குறட்பாக்கள், முறையே இறைவனின் இருப்பையும், இறைவனை வணங்குவதே கற்றலின் பயன் என்றும், இறைவனை வணங்குவதால் விளையும் பயன் இது என்பதையும் போதிப்பதாக எனது தமிழாசான் தமிழாகரர்.முனைவர் சாமி.தியாகராசன் அவர்கள் சொல்வார். இந்த அடிப்படையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எப்படி வள்ளுவத்தைக் காப்பாற்றப் போகிறார்கள்? கடைப்பிடிக்கப் போகிறார்கள்?

வள்ளுவத்தின் அரசாட்சி

tasmac9814

கள்ளுண்ணாமை, சூது புரிதல், ஆகியவை தனி நபர் பேண வேண்டிய ஒழுக்கங்கள். ஆகவே இந்த அதிகாரங்கள் அறத்துப்பாலில் இடம் பெற்றிருக்க வேண்டும். சூதும், கள்ளும் பொதுவில் தீங்கு விளைவிப்பன என்பதால் இதை வள்ளுவர் பொருட்பாலில் வைத்துள்ளார் என்கிறார் பரிமேலழகர். நம் திருக்குறள் தூதரின் நண்பர்கள் லாட்டரி டிக்கெட்டையும் கள்ளுக்கடையையும் திறந்து பொதுச் சேவை செய்வது வள்ளுவமா?

வள்ளுவத்தின் எந்த நெறியையும் கடைபிடிக்காத கூட்டம், தமிழ் என்ற சொல்லை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டம் என்று தெரிந்தும், தன்னைத் தமிழ் தூதர் என்று புகழ்வதைக் கேட்கும் போதையில் அவர்களுக்கு கொடுக்கக் கூடாத இடத்தைக் கொடுத்து அழகு பார்ப்பதை, அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும் என்கிறது 507 வது குறள்.

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும் (குறள் 507)

இந்தக் குறளை மெய்பித்துள்ளார் நம் திருக்குறள் தூதரின் நெருங்கிய நண்பர் கவிஞர்.வைரமுத்து அவர்கள். இராமன் மனிதனாகப் பிறந்ததனால் அவன் கடவுளாக மாட்டான் என்று கவிதை எழுதியுள்ளார்.

vairamuthu 331

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கர்ப்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
(தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில் வெளிவந்த வைரமுத்துவின் கவிதை..)

இந்த இராமனுக்கு முன் மனிதனாக அடி அளந்த திருவிக்கிரமனை வள்ளுவரோ தெய்வமென்கிறார். அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான் என்று 610வது குறளுக்கு உரை எழுதியுள்ளார் திரு.மு.வ அவர்கள்

மடியில்லா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு – – – (குறள் 610)

இந்தக் கருத்தை கங்கைக் கரைக்குச் சென்று நம் திருக்குறள் தூதரின் நண்பர் வைரமுத்து பேசினால், அடுத்த தேர்தலில் உத்திராகண்ட் மாநிலத்தில் இவருக்கு ஓட்டுப் போட ஒருவன் கூட இருக்க மாட்டான். அறிய வேண்டியவற்றை அறியாத வைரமுத்துவின் மீது கொண்ட காதன்மை, திருக்குறள் தூதருக்கு தன்நிலை அறியாமையைத் தந்து விட்டது.

புறநானூறு முதல் தொடங்கி பிற்கால இலக்கியங்கள் வரை இறைவனாகக் கொண்டாடும் இராமனைத் தெய்வம் இல்லை என்று தமிழ் மரபுக்குப் புறம்பாகக் கவிதை எழுதிவிட்டு தமிழ் வழி வாழ்வோம் என்று பித்தலாட்டம் செய்பவரின் நட்பையே கூடா நட்பு என்கிறார் வள்ளுவர்.

தமிழகத்து மக்கள் முன் வேஷம் கலைந்து கோமாளிகளாகக் காட்சியளிக்கும் இந்தத் தமிழ் வியாபரக் கூட்டத்திற்கு மறுவாழ்வு கொடுப்பது வள்ளுவத்திற்கும், தமிழுக்கும், மனித குலத்திற்கும் திருக்குறள் தூதர் செய்யும் துரோகமாகும். அரசியல் லாபம் கிடைக்கும் என்ற கனவில் தகுதியில்லாதவர்களைப் போற்றி, வள்ளுவத்தின் படி நடப்பவர்களை உதாசீனப்படுத்திய திரு.தருண் விஜய் அவர்களின் செயல் தேசியத்திற்கும், தெய்வீகத்திற்கும் பின்னடைவையே ஏற்படுத்தும்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

என்ற 448 ஆம் குறளை நினைவுபடுத்திக் கொண்டு தேசியத்தையும், வள்ளுவத்தையும் பேணிகாக்கும் இயக்கத்தினர், சுட்டிக் காட்டப்பட்ட தவறைத் திருத்திக் கொள்வார்கள் என்று நம்புவோமாக!

குறிப்பு : நம் உழைப்பை திராவிடக் கூட்டங்களிடம் திருக்குறள் தூதர் அடமானம் வைப்பார் என்று சகோதரர் ஹரனிடமும் தமிழாகரர் சாமி.தியாகராசனிடமும் திருவள்ளுவர் திருமேனி ஒப்படைப்பு விழாவிற்கு முன் சொன்னேன். // மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் // என்ற வெற்றி வேற்கை பாடல் வரியை நினைவு படுத்திக் கொண்டு என் கணிக்கும் திறனை நானே பாராட்டிக் கொள்கிறேன்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories