
மத்திய அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் முற்பட்ட வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு பெற EWS சான்றிதழ் பெற வேண்டியது அவசியமாகிறது. அந்த EWS சான்றிதழ் பெற கட்டணமின்றி நோட்டரி கையொப்பம் செய்து வருகிறேன்.
இந்த செய்தி பலரிடம் சென்று விழிப்புணர்வு ஏற்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்டோர் எம்மிடம் கையொப்பம் பெற்று EWS சான்றிதழ் பெற்றுள்ளனர்.
நெல்லை டவுனை சேர்ந்த ஒரு இளைஞர் நேற்று காலை எனது இல்லத்திற்கு வந்து என்னிடம் EWS சான்றிதழ் பெற்ற பின்பு அஞ்சல் துறையில் வேலைக்கு விண்ணப்பித்து பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார். பணி நியமனத்திற்கான நன்னடத்தைச் சான்றிதழும் (Conduct Certificate) நேற்று பெற்று சென்றார்.
கடந்த முறை அஞ்சல் துறைக்கு அவர் விண்ணப்பித்த போது EWS சான்றிதழ் இல்லாததால் 10% இட ஒதுக்கீடு பெற இயலாமல் பணி நியமனம் பெறும் வாய்ப்பை இழந்ததாக குறிப்பிட்டார் . ஆகவே முற்பட்ட சமூக இளைஞர்கள் & மாணவர்கள் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள முற்பட்ட வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டினை பெற உங்கள் தாலுகா அலுவலகங்களில் EWS சான்று பெற்று மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு வாய்ப்பினை பயன்படுத்தி குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றுங்கள்.

EWS சான்றிதழ் பெற முற்பட்ட வகுப்பினர் என்பதற்கான சாதிச் சான்றிதழ் வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை இ – சேவை மூலம் பெற்று அதனுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் என்பதற்காக 20 ரூபாய் பத்திரத்தில் சொத்து விவரங்களை குறிப்பிட்டு அபிடவிட் தயார் செய்து நோட்டரி வழக்கறிஞரிடம் கையொப்பம் பெற்று தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பித்தால் EWS சான்றிதழ் பெறலாம்.
இந்த நோட்டரி கையொப்பம் கட்டணம் ஏதுமின்றி நாம் செய்து கொடுக்கிறோம்.
இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்த பாஜக மோடி அரசை நன்றியோடு என்றும் நினைவுகூர்வோம்
அதேபோல இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து கேடு செய்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பாடம் புகட்டுவோம்.
தமிழகத்தில் தாமரை மலரட்டும். தமிழக அரசு வேலை வாய்ப்பிலும் 10% இட ஒதுக்கீடு மலரட்டும்! EWS சான்றிதழ் பெற கட்டணமின்றி நோட்டரி கையொப்பம் பெற…
கா.குற்றாலநாதன்
நோட்டரி வழக்கறிஞர், மத்திய அரசு வழக்கறிஞர்
மதுரை உயர் நீதிமன்றம்
108 செண்பகம் பிள்ளை தெரு, திருநெல்வேலி டவுண்
போன்: 9865010942