சுப வீ செட்டியார் ஒரு பேட்டியில் சூத்ரன் என்று கூறி #சூத்ரன்_பாதத்தில் பிறந்ததாக வேதத்தில் உள்ளது என்று கூறி இந்து தர்மத்தை இகழ்ந்துள்ளார். பொதுவாக நம் பாரத நாட்டில் ஆங்கிலேய ஆட்சியில் மிஷனரி அமைப்புகள் தங்கள் கிருத்துவ மதத்தை பரப்ப மிகவும் தடையாக இருந்தது நமது இந்த வேதங்களே.
சாதாரணமாகவே நீ சொல்வது பெரிய வேதமா? என்று கூறும் பழமொழி உண்டு. அந்தளவிற்கு இந்து தர்மத்தின் அடிநாதமாக விளங்கியது வேதம். எனவே கிருத்துவ பாதிரிகள் அக்காலத்தில் அந்தணர்கள் போலவே வேடமிட்டு தங்கள் மதத்தை பரப்ப முயற்சித்தார்கள்.
அவ்வகையில் முக்கியமாக வேதத்தை எவ்வாறாவது சிறுமைப் படுத்த வேண்டும். அதன் பெருமைகளை சீர்குலைக்க வேண்டும் என்று முடிவெடுத்து, அதன்படி மிஷனரி அமைப்புகள், பெரும் பணம் செலவு செய்து பலர் வேதத்தை மொழிபெயர்க்கிறோம், வேதத்திற்கு விளக்கம் எழுதுகிறோம் என்று ஆராய்ச்சி என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் விளக்கம் எழுதினார்கள்.
பெரிய அளவில் பணம் செலவு செய்து வேதத்தை மொழிபெயர்கிறோம், ஆராய் கிறோம் என்பது கண்டிப்பாக இந்து தர்மத்தை பாதுகாக்க அல்ல. நம் வேதத்தை சிறுமைப்படுத்தி மதம் மாற்றவே! எனவே ஆங்கிலேயன் வேதத்திற்கு எழுதிய விளக்கம் எவ்வாறு என்றால், சமீபத்தில் ஆண்டாளைப் பற்றி ஆராய்ச்ச