மும்பை பங்குச் சந்தையில் டி.சி.எஸ். மீண்டும் முதலிடம்

பொது தகவல்கள் வணிகம்

01 July12 sensex up - 2026

மும்பை பங்குச்சந்தையில் மதிப்புமிக்க இந்திய நிறுவனங்கள் பட்டியலில் டி.சி.எஸ். மீண்டும் முதலிடம் பிடித்தது.

புதன் கிழமை அன்று மும்பை பங்குச்சந்தையில், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை 4.67 சதவீதம் அதிகரித்தன. ஆயிரத்து 982 ரூபாய் 15 காசுகளாக இருந்த ஒரு பங்கின் விலை, ஆயிரத்து 976 ரூபாய் 55 காசுகளாக உயர்ந்தது. இதன் காரணமாக டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7 லட்சத்து 41ஆயிரத்து 677 கோடி ரூபாயாக அதிகரித்தது.

அதேவேளையில் முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்டிரீசின் சந்தை மதிப்பு 7 லட்சத்து 26 ஆயிரத்து 553 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் சந்தை மதிப்பில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசை பின்னுக்குத் தள்ளி,. டிசிஎஸ் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.