காரசாரமா ஒரு காராமணி குழம்பு!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
karamani - 2026

காராமணி குழம்பு

தேவையானவை:

காராமணி, தேங்காய்ப்பால் – தலா கால் கப்,

புளி – 50 கிராம்,

காய்ந்த மிளகாய் – 5,

கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்,

மிளகு – அரை டீஸ்பூன்,

நறுக்கிய கொத்தமல்லி – கால் கப்,

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

karamani kuzahmbu - 2026

செய்முறை:

முதல் நாள் இரவே காராமணியை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் போட்டு வறுத்து ஆற வைக்கவும்.

அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.

அதனுடன் வேக வைத்து, ஆற வைத்த காராமணி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு சுற்று அரைத்து, புளிக்கரைசலுடன் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.