ஆரோக்கிய சமையல்: கம்பு ரொட்டி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
kampu - 2026

கம்பு ரொட்டி

தேவையானவை:

கம்பு மாவு – ஒரு கப்,

வெங்காயம் – ஒன்று,

பச்சை மிளகாய் – ஒன்று,

சீரகம் – ஒரு டீஸ்பூன்,

கொத்தமல்லித் தழை – அரை கப்,

பெருங்காயத்தூள் – சிறிதளவு,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

kambu rotti - 2026

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கம்பு மாவில் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து வைக்கவும்.

வாழையிலையில் மெல்லியதாக இந்த மாவை தட்டி தவாவில் போடவும். சிறிதளவு எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். பிறகு, திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும் (அடுப்பை ‘சிம்’மில் வைத்து செய்யவும்).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.