
தேவையானப் பொருட்கள் :
பழுத்த நாட்டுத் தக்காளி – கால் கிலோ
பூண்டு – 3 பல்
மிளகு – 5 முதல் 6 வரை
சீரகம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 2
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:

தக்காளியைக் கழுவி நன்கு பிசையவும், பூண்டு மிளகு காய்ந்த மிளகாய் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி அரைத்ததை சேர்த்து கிளறவும் இதில் பிசைந்த தக்காளி மஞ்சள்தூள் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் பின் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். அருமையான கொங்குநாட்டு ரசம் தயார்.



