
பயத்த மாலாடு
தேவையானப் பொருட்கள்:
பாசிப் பருப்பு – 200 கிராம்,
பொடித்த சர்க்கரை – 100 கிராம்,
வறுத்த முந்திரி, திராட்சை – தலா 25 கிராம்,
உருக்கிய நெய் அல்லது வனஸ்பதி – 150 கிராம்,
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை:
பாசிப் பருப்பை பதமாக, பொன்னிறமாக வறுக்கவும். பின் பொடித்துக் கொள்ளவும். பொடித்த பயத்த மாவுடன் சர்க்கரை தூள், ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் அல்லது வனஸ்பதி விட்டு சூடாக்கி கொஞ்சம் கொஞ்ச மாக மாவில் விட்டு கிளறி கெட்டி உருண்டைகளாக பிடிக்கவும். பயத்த மாலாடு ரெடி.
வெல்லம் வைத்து செய்யும் முறை:
வெல்லம் -100கிராம்
வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து பாகு வைக்கவும், பாகு நன்கு முற்றும் முன்பு இளம் பாகும் இல்லாமல் எடுத்து மாவில் விட்டு பிடிக்கவேண்டும் இது மிகுந்த ஆரோக்கியமான பாரம்பரிய உருண்டை ஆகும்.



