தீபாவளி ஸ்பெஷல்: புழுங்கல் அரிசி முள்ளு முறுக்கு!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
mullu murukku - 2026

புழுங்கல் அரிசி முள்ளு முறுக்கு

தேவையானவை:

புழுங்கல் அரிசி – 3 கப்,

கடலை மாவு – ஒரு கப்,

காய்ந்த மிளகாய் – 2,

பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப,

எண்ணெய் – பொரிக்க.

செய்முறை:

புழுங்கல் அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து, அதனு டன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கிரைண்டரில் போட்டு அதிகம் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.

இத்துடன் கடலை மாவு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து பிசையவும். ஒரு கரண்டி சூடான எண்ணெயை மாவின் மேல் ஊற்றி, மீண்டும் நன்றாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கு குழலில் ஒற்றை நட்சத்திர அச்சைப்போட்டு மாவை உள்வைத்து, எண்ணெயில் வட்டமாகப் பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும் (ஒரு துணி அல்லது பிளாஸ்டிக் கவர் மீது பிழிந்து எடுத்தும் எண்ணெயில் சேர்க்கலாம்).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.