ஆரோக்கிய சமையல்: பாகற்காய் மசாலா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
bitter melon - 2026

பாகற்காய் மசாலா

பாகற்காய் – 5

நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப்

மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

மாங்காய் பவுடர் – அரை டீஸ்பூன்

சீரகம் – அரை டடீஸ்பூன்

பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்

சோம்பு – அரை டீஸ்பூன்

நறுக்கிய மாங்காய் – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

masala bitter melon - 2026

செய்முறை:

பாகற்காயின் மேல் தோலை லேசாக சீவிக்கொள்ளவும். பின்னர் இரண்டாக வெட்டி நடுப்பகுதியில் உப்பு கலந்து அரை மணி நேரம் வெயிலில் உலர வைக்கவும். பின்னர் அவற்றை நன்றாக கழுவிக்கொள்ளவும்.

வெங்காயம், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மாங்காய் பவுடர், சீரகம், பெருங்காயத் தூள், சோம்பு, மாங்காய் துண்டுகள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பாகற்காய்களின் உள்ளே வைக்கவும். அவை கீழே விழாத அளவுக்கு நூலினால் கட்டிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் பாகற்காயைக் கலவையுடன் போட்டு பொன்னிறமாகும் வரை கிளறி எடுத்துச் சுவைக்கவும்.

சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், கெட்ட கொலஸ்டிரால் குறைவதற்கும் உதவுகிறது. சிறந்த கோடை காய்கறியான பாகற்காய், ஆக்ஸிஜனேற்றங்களுடன் சேர்த்து வைட்டமின் ஏ மற்றும் சி யைத் தருகிறது.

வயதான அறிகுறிகளைக் குறைக்கின்றன. பசியைத் தூண்டும்., பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்குத் தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்தக் காயை, அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால் இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுவை நீக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.