வித்தியாசமா செய்யுங்க வேர்கடலை ஸ்ட்யூ!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
peanut - 2026

வேர்க்கடலை ஸ்ட்யூ

தேவையானவை:

உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து, தோலுரித்து, மசிக்கவும்),
கேரட் – ஒன்று (வேகவைத்து, சிறிய துண்டுகளாக நறுக்கவும்),
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்),
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று,
பச்சை வேர்க்கடலை – 50 கிராம்,
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்,
நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

peanut stew - 2026

பச்சை வேர்க்கடலையுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும். வாணலியில் நெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.

இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, கேரட், சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு, அரைத்து வடிகட்டிய வேர்க்கடலை – தேங்காய்ப்பால் கலவையைச் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.