December 8, 2024, 2:09 PM
30.3 C
Chennai

இத பண்ணினா வைரஸ் எல்லாம் கிட்டயே வராது!

சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன் 1/4 தேக்கரண்டி லவங்கப் பொடியை குழைத்து 3 நாளைக்கு சாப்பிட்டு வாருங்கள். சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடி போகும்.

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் சளி, இருமல் அல்லது வேறு ஏதேனும் சுவாச பிரச்சனை இருந்தால் பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடிப்பார்கள். ஏன் என்று தெரியுமா?

ஏனெனில் இது நல்ல நிவாரணம் வழங்கும். இதற்கு காரணம் மஞ்சள் தூளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-கார்சினோஜெனிக் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் தான்

அதுமட்டுமின்றி, மஞ்சளில் மாங்கனீசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவையும் மஞ்சளில் உள்ளது. அதேப்போல் பாலில் பாஸ்பரஸ், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கால்சியம், நல்ல கொழுப்பு, ரிபோஃப்ளேவின், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 உள்ளது

சளி, இருமல் :-

சளி, இருமல் மற்றும் இதர சுவாசப் பிரச்சனைகள் நீங்கள் சந்தித்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், இப்பிரச்சனைகளுக்குக் காரணமான பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் அழிக்கப்படும்.

ALSO READ:  ஹாலிவுட்டுக்குச் செல்லும் யோகி பாபு!

இரத்தம் சுத்தமாகும் :-

உங்கள் உடலில் உள்ள இரத்தத்தை தினமும் சுத்தம் செய்ய நினைத்தால், பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள். இதனால் மஞ்சளில் உள்ள மருத்துவ குணத்தால், இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு, உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக ஓடும். மேலும் இது மூட்டு வலிகளையும் சரிசெய்யும்.

எலும்புகளை வலிமைப்படுத்தும் :
பாலில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் நல்லது மற்றும் மஞ்சள் எலும்புகளை வலிமையாக்கும். எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

நல்ல தூக்கம் :-

தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். வேண்டுமெனில் இன்று முயற்சித்துப் பாருங்கள்.

தலைவலி நீங்கும்:-

மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர சத்துக்கள், சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். எனவே தலை வலி அதிகமாக இருக்கும் போது, பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ALSO READ:  மழை வேண்டி உசிலம்பட்டி அருகே பெருமாள் கோயிலில் மாபெரும் அன்னதானம்!

மாதவிடாய் கால வயிற்று வலி :-

பெண்கள் தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர, மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்கள் குறையும்.

எடை குறையும் :-

மஞ்சளில் உள்ள சேர்மங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை உடைத்து, உடல் எடை குறைய உதவும். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

சரும அழகு அதிகரிக்கும் :-

முக்கியமாக பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, சருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

பஞ்சாங்கம் டிச.08 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: டிச.08ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம||श्री:|| !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீ:!!श्री:श्रीमते...